என் மலர்
ஈரோடு
- பவானி முதல் சின்ன பள்ளம் வரை ரோட்டின் இரு பகுதிகளிலும் சுமார் 950 மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
- ஒப்பாரி பாடல்கள் பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி:
பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பவானி முதல் சின்ன பள்ளம் வரை ரோட்டின் இரு பகுதிகளிலும் சுமார் 950 மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி ஒரு மரத்திற்கு 10 மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்ற உத்திரவு படி பவானி முதல் சின்ன பள்ளம் வரை 9,500 மரங்கள் நடப்பட்டு அதை நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி ஈரோடு மாவட்ட பசு மை தாயகம் சார்பில் நூதன போராட்டம் நடத்தி னர்.
பசுமை தாயகத்தினர் பவானி, சித்தார் மேட்டூர் மெயின் ரோட்டில் சுமார் 100 ஆண்டு வளர்ந்து இருந்த மரம் வெட்டப்பட்ட நிலையில் அந்த மரத்தின் வேர் பகுதிக்கு மாலை அணிவித்து மலர் தூவி ஒப்பாரி பாடல்கள் பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமை த்தாயக மாநில துணைச் செயலாளர் ராஜே ந்திரன் தலைமையில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் பரமசிவம், வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பி னர் கோபால், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி,
தலைவர் வக்கீல் செங்கோ ட்டையன், பொருளாளர் திலகம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மனோ கரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரவி, தொழி ற்சங்க பொறுப்பாளர்கள் சுதாகர், திருமுருகன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடுமுடி வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
- நோய் தாக்கப்பட்ட செடியின் வெங்காயம் மற்றும் வேர்கள் அழுகி காணப்படும்.
ஈரோடு:
சின்ன வெங்காய சாகுபடி யில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்தி குறி ப்பில் கூறியிருப்ப தாவது:-
கொடுமுடி வட்டாரத்தில் ஆண்டு தோறும் 346 ஹெ க்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ப்படுகிறது. விதை குமிழ்கள் (விதைக்காய்கள்) மூலமாகவே சின்ன வெங்காயம் பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
வெங்காயத்தை அடித்தாள் அழுகல் நோய், அடிச்சாம்பல் நோய், நுனிகருகல் நோய், வேர் அழுகல் நோய், வெ ள்ளை அழுகல் நோய், ஊதா கொப்புள நோய் போன்ற நோய்கள் தாக்குகின்றன.
எனவே, மேற்கண்ட நோ ய்களை கட்டுப்படுத்த கீழ்கண்ட பயிர் பாதுகாப்பு முறை களை விவசாயிகள் மேற்கொள்ள லாம். முதலா வதாக சின்ன வெங்காயம் நடவு செய்த 30வது நாளில் 2.5 கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸ் மற்றும் 2.5 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடியை நன்கு மக்கிய 250 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.
வெங்காயப் பயிரின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் நோய் பாதித்த செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து துவண்ட காய்ந்து விடு வதால் இதனை விவசாயிகள் கோழிக்கால் நோய் என்றழைக்கின்றனர். நோய் தாக்கப்பட்ட செடியின் வெங்காயம் மற்றும் வேர்கள் அழுகி காணப்படும்.
வெங்காய வயல்களில் நல்ல வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும். தகுந்த இடை வெளியில் வெங்காயம் நடவு செய்யப்பட வேண்டும். தண்ணீர் மற்றும் உரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எறிந்து விட்டு அந்த இடத்தைச் சுற்றிலும் 0.25 சதவீதம் காப்பர் ஆக்ஸிகு ளோரைடு (அல்லது) 0.1 சதவீதம் காப்பர் ஹைட்ராக்சைடு கரைச லை மண்ணில் ஊற்ற வேண்டும்.
தண்ணீர் தேங்கும் பகுதி களில் ஏற்படும் பேக்டீரியல் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஸ்டெப்டோ சைக்கிளின் (0.2 மி.கி.) மருந்துடன் காப்பர் ஆக்சி குளோரைடு (2.5 மில்லி கிராம்) அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு (1 மில்லி கிராம்) மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.
கோழிக்கால் நோய் மற்றும் ஊதா கொப்புள நோயை கட்டுப்படுத்த தேவை யின் அடிப்படையில் மட்டுமே டெபுகோனசால் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
மழை, பனிக்காலங்க ளில் ஏற்படும் அடி சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்ட ர் தண்ணீருக்கு 1 மில்லி ரிடோமில் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற அளவில் 7 நாள்கள் இடைவெ ளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீ ருக்கு 0.5 மில்லி டீபால் போன்ற ஒட்டும் திரவம் கலந்து தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியது.
- மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் எழு மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முரு கேசன் (வயது 52). இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் தனது இரு சக்கர வாகனத் தில் ஈரோடு-முத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அவர் மண்கரடு அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரி யாத வாகனம் எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியது.
இதில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் முருகேசன் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- விடுமுறை தினமான இன்று கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர்.
- அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
இந்த கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்ப ணைக்கு வந்து செல்கிறார்கள்.
மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்க ளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடு ம்பத்து டன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். நேற்று சனிக்கிழமை பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல் விடுமுறை தினமான இன்று ஞாயிற்று க்கிழமை கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த னர்.
இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்தனர்.
இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.
இதே போல் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகருக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளை யாடி மகிழ்ந்தனர்.
மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளை யாடி இயற்கையை ரசித்து சென்றனர்.
இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர். இதனால் இன்று பொதுமக்க ளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
- கழிவுகளை கொட்ட கூடாது என்று பேரூராட்சி நிர்வாகத்தால் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.
- அதனையும் மீறி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச் சாம்பாளையம் பகுதியில் கழிவுகளை கொ ட்ட கூடாது என்று பேரூரா ட்சி நிர்வாகத்தால் கடந்த மாதம் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.
அவ்வாறு கொட்ட வரும் வாகனத்தின் மீதும், வாகனத்தின் உரிமை யாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என்று பேரூரா ட்சி நிர்வா கத்தின் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்ப ட்டிருந்தது.
அதனையும் மீறி அந்தபகு திக்கு வந்த கழிவுக ளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கவிதா, நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட நார் தொழிற்சாலை நடத்து வரிடத்தில் பேச்சுவார்த்தை செய்து இனி இதுபோல் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததை அடு த்து அங்கிருந்து பொதும க்கள் கலைந்து சென்றனர்.
இதனால் செம்புளி ச்சாம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.
ஈரோடு:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் 20 ஆயிரத்து 789 எண்ணிக்கையிலான 9 ஆயிரத்து 235 கிலோ எடை கொண்ட தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.69 காசுகள்,
அதிகபட்ச விலையாக ரூ.24.89 காசுகள், சராசரி விலையாக ரூ.23.79 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.
- விவசாயிகள் 1,392 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- இதன் விற்பனை மதிப்பு ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780 ஆகும்.
ஈரோடு:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சா மிர்தம் உள்ளிட்ட பிரசா தங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் இருந்து கரும்பு சர்க்கரை எனப்படும் நாட்டு ச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்தில் பங்கே ற்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,392 மூட்டைகள் நாட்டுச்சர்க்க ரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் 60 கிலோ எடையி லான ஒரு மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையா க ரூ.2,720-க்கும், அதிகபட்ச மாக ரூ.2,750-க்கும் விற்ப னையானது. 2-ம் தரம் குறைந்த பட்சமாக ஒரு மூட்டை ரூ.2,600 -க்கும், அதிகபட்ச மாக ரூ.2,620-க்கு விற்பனை யானது.
இந்த ஏலத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 620 கிலோ எடையிலான 927 நாட்டு ச்சர்க்கரை மூட்டைகள் விற்ப னையாகின.
இதன் விற்பனை மதிப்பு ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780 ஆகும் என விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் தெரிவி த்துள்ளார்.
- ஏலத்துக்கு மொத்தம் 5,174 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
- இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 94 லட்சம் ஆகும்.
ஈரோடு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வார ந்தோறும் சனி மற்றும் புதன்கி ழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்துக்கு மொத்தம் 5,174 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்ப ரைகள் 2,937 மூட்டைகள் வர பெற்றிருந்தன.
இவை குறை ந்தபட்ச விலையாக கிலோ ரூ.74.89-க்கும், அதிகபட்சமாக ரூ.81. 00-க்கும் விற்பனை யாகின. 2-ம் தரக் கொப்பரை கள் 2,237 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.40.21-க்கும், அதிக பட்சமாக ரூ.77.03-க்கும் விற்பனையாகின.
மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரம் கிலோ கொப்ப ரைகள் விற்பனையாகின.
இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 94 லட்சம் ஆகும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீ சார் பிடித்தனர்.
- 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சி, சிவகிரி, ஈரோடு டவுண், ஹாசனூர் ஆகிய பகுதிகளில் சட்டவி ரோத மாக மது பாட்டில்கள் விற் பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போ லீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொ டக்குறிச்சி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பழனி ச்சாமி மனைவி தனலட்சுமி (வயது 45),
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சாரதி (25), புதுக்கோட்டை மாவட்டம் பெரிய கோட்டையை சேர்ந்த தங்கராசு மகன் பாரதி (24) புளியம்பட்டி மாதவி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் இளவரசன் ஆகியோரை போலீ சார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்
- அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந்தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 1,800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,200 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் மட்டம் 80.90 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.40 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.56 அடியாக உள்ளது.
- வீராசாமி படுத்திருந்த மெத்தை முழுவதும் தீப்பிடித்து எரிந்து வீராசாமி உடல் கருகி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீரம்பாளையம், கைக்கோளார் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (82). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். வசந்தா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர்.
வீராசாமி கைக்கோளர் தெருவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். தந்தைக்கு 2-வது மகள் 3 வேளையும் சாப்பாடு கொடுத்து பார்த்து வந்தார். மற்ற 2 மகள்கள் அவ்வபோது தந்தையை பார்த்து செலவுக்கு பணம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீராசாமியின் 2-வது மகள் வழக்கம் போல் சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது வீராசாமி படுத்திருந்த மெத்தை முழுவதும் தீப்பிடித்து எரிந்து வீராசாமி உடல் கருகி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்திய மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீராசாமி பீடியை பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை மெத்தையில் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 921-க்கு விற்பனையானது.
ஈரோடு:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 740 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சவிலையாக ரூ.76.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.5 காசுகள், சராசரி விலையாக ரூ.78.39 காசுகள் என்ற விலைகளிலும்,
2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.60 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.74.89 காசுகள், சராசரி விலையாக ரூ.73.9 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 921-க்கு விற்பனையானது.






