அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் சாவு

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் உயிரிழந்தார் புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் சாவு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அவ ல்பூந்துறை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகன் பூவேந்திரன் (34) மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். குணசேகரன் தனது சகோ தரி கோமதியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து ள்ளது. இந்த நிலையில் கட ந்த 24-ம் தேதி காலையில் வழக்கம் போல தனது சகோ தரியின் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது வீட்டுக்குச் சென்ற குணசேகரன், அன்று இரவு சாப்பிடச் செல்லவில்லை என கூற ப்படுகிறது. மது அருந்தும் பழக்கம் உள்ளதால் சில நாட்களில் போதையில் சாப்பிட வராமல் தனது வீட்டிலேயே குணசேகரன் தங்கி விடுவாராம்.

இந்நிலையில் சம்பவத்த ன்று குணசேகரனின் வீட் டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது குணசேகரன் உயிரிழந்த நிலையில் வீட்டினுள் கிட ந்துள்ளார். பின்னர் இதுகு றித்து மகன் பூவேந்திரன் அளித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com