அந்தியூர் பகுதியில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக பரபரப்பு

அந்தியூர் பகுதியில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக பரபரப்பு ஏற்பட்டது எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அந்தியூர் பகுதியில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக பரபரப்பு
Published on

அந்தியூர்;

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சாந்திய பாளை யம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு காரில் மர்ம நபர்கள் சிலர் முகமூடி அணிந்து கொண்டு வந்தனர். அந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்த வந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் பொதுமக்களை கண்டதும் அங்கு இருந்து காரில் தப்பி சென்றாக மக்கள் கூறினர். இது குறித்த தகவல் அந்தப் பகுதி பொதுமக்கள் சமூக வளை தலங்களில் பதிவிட்டனர். இந்த தகவல் வேகமாக பரவியது. இத னால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல், கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சென்று விசா ரணை நடத்தினர்.

மேலும் காரில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசார ணை நடத்தி வரு கிறார்கள். இதனால் அந்த பகுதி பொது மக்கள் ஒரு வித அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள். எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com