சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடுகனூரை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப் போது வடுகனூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

இதை அடுத்து அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் சங்கரன் மலையம்பாளையம் போ லீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com