என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "key experts insist"

    • 10 சதவீத வேட்டி உற்பத்தியை கூட விசைத்தறியாளர்கள் துவங்கவில்லை.
    • நூல் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்.

    ஈரோடு:

    தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல் விசைத்தறி யாள ர்களுக்கு வழங்கப்பட்டு அதன் பின் உற்பத்தி தொடங்கப்படும்.

    ஆனால் வேட்டி உற்பத்தி க்கான நூல் கொள்முதல் செய்வதில் டெண்டர் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் வேட்டி உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் வேட்டி உற்பத்தி செய்வதற்கான நூலினை தற்காலிகமாக வெளி மார்க்கெட்டில் குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விசைத்த றியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கந்தவேல் தமிழக அரசுக்கு அனுப்பி மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் இலவச வேட்டி உற்பத்திக்கு, 40-ம் நம்பர் காட்டன் நூல் இ-டெண்டர் மூலம் 1,000 டன் கொள்முதல் செய்ய அறிவிப்பை 20 நாளுக்கு முன் வெளியிட்டனர்.

    அப்போது டெண்டர் நடத்த வில்லை. இந்நிலையில் இ-டெ ண்டர் தள்ளி வைத்து மறுடெண்டர் வரும் 31-ந் தேதி நடத்தப்பட உள்ளது.

    தற்போதைய சூழலில் தமிழக அரசின் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்தும் குறைந்த அளவு நூல்களே உற்பத்தியாவதால் இதுவரை 10 சதவீத வேட்டி உற்பத்தியை கூட விசைத்தறியாளர்கள் துவங்கவில்லை.

    எனவே 31-ந் தேதி டெண்டர் பெற்று இறுதி செய்து நூல் உற்பத்தியாகி விசைத்தறியாளர்களுக்கு கிடைக்க பல நாட்கள் ஆகும்.

    எனவே விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேட்டி உற்பத்திக்கான, 40-ம் நம்பர் காட்டன் நூல், 500 டன் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

    ×