சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு

சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீ சார் பிடித்தனர்.24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சி, சிவகிரி, ஈரோடு டவுண், ஹாசனூர் ஆகிய பகுதிகளில் சட்டவி ரோத மாக மது பாட்டில்கள் விற் பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போ லீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொ டக்குறிச்சி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பழனி ச்சாமி மனைவி தனலட்சுமி (வயது 45),

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சாரதி (25), புதுக்கோட்டை மாவட்டம் பெரிய கோட்டையை சேர்ந்த தங்கராசு மகன் பாரதி (24) புளியம்பட்டி மாதவி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் இளவரசன் ஆகியோரை போலீ சார் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com