ரூ.1 கோடியே 94 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஏலத்துக்கு மொத்தம் 5,174 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 94 லட்சம் ஆகும்.
ரூ.1 கோடியே 94 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
Published on

ஈரோடு:

பெருந்துறை வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வார ந்தோறும் சனி மற்றும் புதன்கி ழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்துக்கு மொத்தம் 5,174 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்ப ரைகள் 2,937 மூட்டைகள் வர பெற்றிருந்தன.

இவை குறை ந்தபட்ச விலையாக கிலோ ரூ.74.89-க்கும், அதிகபட்சமாக ரூ.81. 00-க்கும் விற்பனை யாகின. 2-ம் தரக் கொப்பரை கள் 2,237 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.40.21-க்கும், அதிக பட்சமாக ரூ.77.03-க்கும் விற்பனையாகின.

மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரம் கிலோ கொப்ப ரைகள் விற்பனையாகின.

இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 94 லட்சம் ஆகும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com