சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு டவுண் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பவானி, அந்தியூர், நம்பியூர் ஆகிய பகுதி களில் அரசு அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த சூரம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் தண்டபானி (வயது 27),

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சின்னையா (44), பவானி கண்ணாடி பாளை யத்தை சேர்ந்த அண்ணா துரை (52),

அந்தியூர் கோ ட்டைமேடு பகுதியை சேர் ந்த சுரேஷ் குமார் (44), நம்பியூர் சத்யா நகரை சேர்ந்த செல்வராஜ் (63) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இதைபோல் மரப்பம்பாளையம் அருகே மது அருந்திய குற்றத்திற்காக செங்கேரிபாளையம் சௌந்தரராஜன் (37) என்பவரை சிவகிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com