என் மலர்
ஈரோடு
- கிணற்றில் இரவு ஆண் மயில் ஒன்று தவறி கீழே விழுந்துள்ளது.
- ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் உள்ள சலங்கபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணறு ஒன்று 100 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த கிணற்றில் நேற்று இரவு ஆண் மயில் ஒன்று தவறி கீழே விழுந்துள்ளதாக பவானி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பவானி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு கட்டி கீழே இறங்கி கிணற்றில் இருந்த ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
- பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
- அணையின் நீர்மட்டம் 12.13அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வர த்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 72.55 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடி 448 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும்,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.74 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 12.13அடியாகவும்,
வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடியாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
- அந்த பகுதியில் சிலர் சூதாடிக்கொண்டிருந்தனர்.
- போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
கொடுமுடி:
கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் அனில்தோட்டம் பகுதியல் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றுவருவதாக கொடுமுடி சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாடிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் (55), கொடுமுடி அக்ரஹாரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (56) உட்பட 10 பேர் சூதாடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 10 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 400 ஆகியவற்றை கைப்பற்றினர்.
- விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.
கொடுமுடி:
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 36 ஆயிரத்து 475 எண்ணிக்கையிலான 14 ஆயிரத்து 860 கிலோ எடை யுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ 21.10 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 24.15 காசுகள், சராசரி விலையாக ரூ22.75 காசுகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.
- தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார்.
- டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் 111 கர்ப்பிணி பெண்களுக்கும், மாவட்டம் முழுவதும் 3000 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெவ்வேறு நாட்களில் நடத்தப்படுகிறது.
இது ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு ஓய்வு வீடுகளில் கிடைக்காத சூழல் உள்ளது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என பொதுவாக கருத்து சொல்வதுண்டு.
எனினும் மருத்துவரிடம் ஆலோசித்து செயல்பட வேண்டும், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன இந்த துறையின் சார்பாக அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார். பேருந்து பயணம், உரிமைத்தொகை அரசு, பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம் குடும்ப பெண்களுக்கு சுமையை குறைத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இவ்வாறாக ஒவ்வொன்றாக பெண்களின் நலன் கருதி முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
டெங்கு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் டெங்கு பாதிப்பு குறித்து தகவல் கிடைத்தால் அந்த பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளனர்.
டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற மாநில ங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய தனிக்குழு அமைத்து இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன அதை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் முழுமையாக அதைப்பற்றி கருத்துக்கள் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது.
- சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை மின்சார பயன்பாட்டில் கிலோவாட்டுக்கான கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.154ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண சுமையிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மீண்டு வர முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தையும், பீக் அவர்ஸ் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும். 3பி மின் கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்ட ண நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வோர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை ( பல ஆண்டு கட்டணம்) உடனடியாக ரத்து செய்து, 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
எல்டி கட்டண முறையில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 4ம் கட்டமாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காங்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை வழக்கம்போல் மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
பின்னர் 16-ந் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் சாவி அருகில் உள்ள வீட்டின் பகுதியில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம், நகை கிடைக்காத நிலையில் வெள்ளாங்கோயில் பகுதியில் நகை மற்றும் பணத்தை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அதனை அங்கேயே வைத்து விடும்படியும், இல்லையென்றால் (இன்று) வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் கோழி குத்தி பரிகாரம் செய்யப் போவதாகவும் இந்த பரிகாரம் செய்யும்போது பணம், நகை எடுத்தவர்கள் குடும்பமே கடும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும்,
இதனை தவிர்க்க வீட்டில் இருந்த பணம், நகை எடுத்தவர்கள் கொண்டு வந்து அங்கேயே வைக்குமாறு பாதிக்கபட்ட குடும்பத்தினர் பிளக்ஸ் பேனர் அடித்து வீட்டின் முன்புள்ள சாலையில் வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அப்பகுதி மக்கள் இந்த பேனரை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இந்நிலையில் திருடிய நகை வைக்கப்படாததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேனரில் கூறியவாறு மாங்காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த சூலாயுதத்தில் இன்று சேவலை குத்தி பரிகாரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
- பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக் கிராமம், கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.
இதையடுத்து அவர் அந்தியூர் எண்ணமங்கலம் ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் தனது மகன் பழனிசாமி (40) வீட்டில் வசித்து வந்தார். பழனிசாமி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னு சாமிக்கு உடல் நலம் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளார்.
பொன்னுசாமி அடிக்கடி, அவரது அக்கா வீட்டுக்கு சென்று சில நாள்கள் தங்கி விட்டு பின்னர் மகன் வீட்டுக்கு வருவது வழக்க மாம்.
அப்படி தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கடந்த 20-ந் தேதி கூறி விட்டு சென்ற பொன்னுசாமி 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து, அவரது அக்காள் மாதம்மாளிடம் விசாரித்த போது அவர், அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பொன்னுசாமி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கோவிலூர் புதுக்கரடு, வறட்டுமலை வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக மகன் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உறவினர்க ளுடன் அங்கு சென்ற பழனிசாமி அழுகிய நிலை யில் இருந்த தனது தந்தை பொன்னுசாமியின் சடலத்தை மீட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (43). இவர்களது மகள் சவுந்தர்யா. இவரை, வளர்மதியின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சவுந்தர்யா கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதனால், தந்தை கருப்பு சாமி மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமை யாகி தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகளின் நிலை குறித்த விரக்தியில் மதுபோதையில் கருப்புசாமி புலம்பிக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை வளர்மதி எழுந்து பார்த்தபோது கருப்புசாமி, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கருப்புசாமி இறந்து விட்ட தாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் புதிய கட்டிட வளாகத்தில், இரும்புக் கம்பியில் தூக்கி ட்ட நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தொங்கிக் கொண்டி ருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
தூக்கில் தொங்கிய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரிய வில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், அற ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதி ப்பிலான மோட்டார் சைக்கி ளை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வாங்கினார்.
இதை தொடர்ந்து 4 நாள்களிலேயே அந்த மோட்டார் சைக்கிளின் என்ஜீனில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த கவுரி சங்கர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்துக்கு சென்றார்.
தொடர்ந்து அவர் அந்த விற்பனை நிலையத்தில் அந்த மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக வேறு மோட்டார் சைக்கிளை மாற்றி தருமாறு நேற்று இரவு கேட்டதாக தெரிகிறது.
ஆனால் ஷோரூம் ஊழியர்களோ மோட்டார் சைக்கி ளில் ஏற்பட்டபழுதை சரிசெய்து தருவதாக மட்டும் கூறி உள்ளனர். இதனால் கவுரி சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஊழியர்கள் ஷோரூமை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
வாங்கிய 4 நாட்களிலேயே மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டதால் அதே மாதிரியான வாகனத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும், அப்பகுதியினரும் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.
- கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.1.53 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,241 மூட்டைகளில் 2,05,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.73.39-க்கும், அதிகபட்சமாக, ரூ.79.59-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக, ரூ.45-க்கும், அதிகபட்சமாக ரூ.75.29-க்கும் விற்பனையாயின.
மொத்தம் ரூ.1.53 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
- அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.
- மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடியை அடுத்த காரணாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையை நோக்கி சம்பத்தன்று காலை 10 மணிக்கு அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.
பின்னர் நிழற்குடையின் பின்புறம் உள்ள திட்டில் அவர் படுத்திருந்துள்ளார். பின்னர் அவர் இறந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் 50 வயது மதிக்கத்தக்க நிலையிலும், வலது கை மணிக்கட்டில் சிவப்பு கயிறு அணிந்தும், கருப்பு கலர் சட்டையும், பச்சை கலரில் வேட்டியும் அணிந்திருந்தார். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
- தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
அறச்சலூர்:
அறச்சலூரை அடுத்த வடபழனி குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஆறப்பகவுண்டர்(75) விவசாயி. இவரது மனைவி சிவகாமி (65). இவர்களது ஒரே மகன் ராஜசேகர். சாப்ட்வேர் பொறியாளரான ராஜசேகருக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது சென்னையில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் ஆறப்பகவுண்டரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டு மெயின்கேட்டை திறக்காமல் உள்ளே சென்று வீட்டின் உள் கதவை உடைத்து அந்த வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் மற்றும் 1½ பவுன் நகையுடன் அங்கிருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் மாலை 4 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பிய ஆறப்பகவுண்டர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு நகை-பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வழக்கு பதிந்து தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வடபழனி குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






