search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "committed suicide by drinking poison"

    • சக்திகுமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சியின் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சக்திகுமார் (வயது 39) இருந்தார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு சஞ்சய் (14) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் சக்திகு மார் உடல்நிலை சரியில்லா மல் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்றும் வந்தார். இதன் காரணமாக சக்திகுமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சக்தி குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மனமுடைந்த சாமிநாதன் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே பி.கே.புதூர் பெரிய முளியனூரை சேர்ந்தவர் சாமிநாதன் (31). கட்டிட தொழிலாளி. இவருக்கும் கிருஷ்ணவேணி என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக மனைவியை பிரிந்து சாமிநாதன் வாழ்ந்து வந்தார். மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மனமுடைந்த சாமிநாதன் சம்பவத்தன்று மதியம் பெரிய முளியனூர் அருகே உள்ள மலைப்பாங்கான இடத்திற்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.

    பின்னர் அவரது தந்தை நல்லாகவுண்டருக்கு நான் விஷம் குடித்து விட்டேன் என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அங்கு சென்று சாமிநாதனை மீட்டு அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×