பேரூராட்சி துணைத்தலைவர் விஷம் குடித்து தற்கொலை

சக்திகுமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூராட்சி துணைத்தலைவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சியின் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சக்திகுமார் (வயது 39) இருந்தார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு சஞ்சய் (14) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சக்திகு மார் உடல்நிலை சரியில்லா மல் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்றும் வந்தார். இதன் காரணமாக சக்திகுமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சக்தி குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com