பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,851 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 72.37 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,851 கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களி ன் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 72.37 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடி 448 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 3,851 கனடியாக அதிகரித்து வருகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.71 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 11.97அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98அடியாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com