என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் காலநிலை பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் குருவரெட்டியூர், தண்ணீர்பந்தல்பாளையம், கோனார்பாளையம், மூங்கில்பாளையம், ஜி.ஜி.நகர், குரும்பபாளையம்.

    இதேபோல் 30-ந் தேதி (சனிக்கிழமை) ஜர்த்தல் சித்த கவுண்டனூர், கண்ணாமூச்சி, பாப்பாத்திக்காட்டு புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் பொறுப்பு மா.பொன்னுவேல் தெரிவித்துள்ளார்.


    • டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மருத்துவர் பூரணசந்திரன் ஆலோசனைகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவ டிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கொடுமுடி தாலுகாவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கொடுமுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தலைமை மருத்துவர் பூரணசந்திரன் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்ற நோய் பாதிப்புகளை தவிர்த்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    • சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
    • சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வேளாண்மை துறையின் சார்பில் அந்தியூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (உட்ட மிகு சிறுதானியங்கள்)திட்ட த்தின் கீழ் திட்டம் குறித்தும் சிறுதானியங்களின் பயன்கள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தியூரில் திட்ட விளக்க வாகன பிரச்சா ரத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்திய அரசின் பரிந்து ரையை ஏற்று 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்ட ங்களை வகுத்துள்ளது. மேலும் பொது மக்களி டையே சிறு தானியங்கள் பயன்பாட்டி னை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திட்ட விளக்க விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இத்திட்ட விளக்க வாகன பிரச்சாரத்தில், சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி, பணி வரகு ஆகிய ஊட்டமிகு சிறு தானியங்களின் பயன்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மை களை பொது மக்க ளிடம் விளக்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    சிறுதானியங்களின் பயன்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

    மக்களிடம் மாறி வரும் நவீன உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படு கின்றது.இதனை தடுக்க சிறுதானி யங்களை அதி கமாக எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து வேளா ண்மை துறை யின் சார்பில் விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வரு கின்றது.

    சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • முகமது யூசுப் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் முகமது யூசுப் (37). இவருக்கு கடந்த பல வருட ங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அடுத்தடுத்த 3 ஆண் குழந்தைகள் பிறந்து உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டன.

    இதனால் அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன் மனைவி அவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்குள்ளான முகமது யூசுப் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முகமது யூசுப்பும், அவரது தாயார் சாய்ரா பானுவும் (58) சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர்.அதிகாலை சாய்ராபானு கண் விழித்துப் பார்த்த போது வீட்டின் விட்டத்தில் முகமது யூசுப் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே முகமது யூசுப் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளி யம்பட்டி அடுத்த பவானிசாகர் பசுவா பாளையத்தை சேர்ந்த வர் ராமகிருஷ்ணன் (வயது 27). இவர் தொட்ட ம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    அப்போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மறு வாழ்வு முகாமை சேர்ந்த மோகன்ராஜ் (27) என தெரிய வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாலஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

    • கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மொடப்பள்ளி தோட்டத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர்.

    கிருஷ்ணகுமார் உட ல்நிலை பாதிக்கப்பட்டு மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று உடல் வலி தாங்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதையடுத்து தேன்மொழி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜீவபாரதி (22) அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர்.
    • அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆசாரி மேடு பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கோபி பச்சைமலை ரோடு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திகேயன் (வயது 29), காசிபாளையம் சந்தை கடை புதூரை சேர்ந்த வெங்கடசாமி மகன் செல்வன் (51), கோபி புதுப்பாளையம் லோகு நாதன் மகன் சபாபதி (57), சத்தியமங்கலம் ரெங்க சமுத்திரம் மணி மகன் குப்புசாமி (40), கோபியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பி யாணன் (50), கதிர்வேல் மகன் கோபால் (47), கோபி வண்டிப்பேட்டை ராஜூ மகன் பிரகாஷ் (50), அதே பகுதியை சேர்ந்த பொன்னு ச்சாமி கவுண்டர் மகன் சக்தி என்ற சுரேஷ்குமார் (49), கோபி அங்குவிலாஸ் தெரு ராமசாமி மகன் குமார் (48), செல்லப்பா நகர் சுப்பிரமணி மகன் கணேஷ் குமார் (46), புது ஹாஸ்பிடல் ரோடு சையது முஸ்தபா மகன் ஜெபர் (59), பாரதி தெரு இப்ராஹிம் மகன் ஜெபர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 100 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட த்தில் செப்டம்பர் 2023-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும்.

    11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சி னைகள் குறி த்து கருத்துக்கள் தெரிவி க்கலாம்.

    மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவ லர்களின் விளக்கங்க ளும் தெரிவி க்க ப்படவு ள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை.
    • அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து வரும் 28-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருட்கள் ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.98 லட்சத்து 29 ஆயிரத்து 953-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.

    கொடுமுடி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 1 ஆயிரத்து 455 மூட்டைகள் கொண்ட 68 ஆயிரத்து 75 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.75.98 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.80.19 காசுகள், சராசரி விலையாக ரூ.77.89 காசுகள் என்ற விலை களிலும், 2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.89 காசுகள், சராசரி விலையாக ரூ.70.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.51 லட்சத்து 36 ஆயிரத்து 903-க்கு விற்பனையானது.

    இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, நிலக்கடலை விற்பனை க்கான ஏலம் நடந்தது.

    இதில் 14 ஆயிரத்து 600 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 398 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக 16 ரூபாய் 39 காசுகள், அதிகபட்ச விலையாக 23 ரூபாய் 70 காசுகள், சராசரி விலையாக 22 ரூபாய் 59 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து நடந்த தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 1 ஆயிரத்து 79 மூட்டைகள் கொண்ட 51 ஆயிரத்து 123 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்ப னை யானது.

    விற்பனை யான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.72.71 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.80.19 காசுகள், சராசரி விலையாக ரூ.77.19 காசுகள் என்ற விலை களிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60.99 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.99 காசுகள், சராசரி விலையாக ரூ.70 .19 காசுகள் என்ற விலை களிலும் மொத்தம் ரூ.37 லட்சத்து 31 ஆயிரத்து 012-க்கு விற்பனையானது.

    இவற்றையடுத்து நடந்த நிலக்கடலை விற்பனை க்கான ஏலத்தில் 399 மூட்டைகள் கொண்ட 11 ஆயிரத்து 649 கிலோ எடையுள்ள நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.63.13 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.86, சராசரி விலை யாக ரூ.84.30 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 012-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் ரூ.98 லட்சத்து 29 ஆயிரத்து 953-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடி 781 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணை யின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லா ததால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு 3,851 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இன்று மழைப்பொழிவு இல்லாததால் மீண்டும் நீர் வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 781 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.71 அடியா கவும், பெரும்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 11.81 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98அடியாகவும் உள்ளது.

    • கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
    • தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டன. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகளும், 730 வார சந்தை கடைகளும் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய வணிக வளாகத்தில் ஏற்கனவே கனி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மாத வாடகையாக ரூ. 31,500-ம், வாய்ப்புத்தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்லவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படாமலேயே உள்ளது.

    இதற்கிடையே கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர்.

    இதையடுத்து சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி பெற்று கனி மார்க்கெட் பகுதியில் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு 86 கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் முதல் பழைய இடத்தில் மீண்டும் ஜவுளி சந்தை முழுமையாக செயல்படும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ×