மன உளைச்சலில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

முகமது யூசுப் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மன உளைச்சலில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் முகமது யூசுப் (37). இவருக்கு கடந்த பல வருட ங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அடுத்தடுத்த 3 ஆண் குழந்தைகள் பிறந்து உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டன.

இதனால் அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன் மனைவி அவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான முகமது யூசுப் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முகமது யூசுப்பும், அவரது தாயார் சாய்ரா பானுவும் (58) சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர்.அதிகாலை சாய்ராபானு கண் விழித்துப் பார்த்த போது வீட்டின் விட்டத்தில் முகமது யூசுப் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே முகமது யூசுப் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com