சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஆசாரி மேடு பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கோபி பச்சைமலை ரோடு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திகேயன் (வயது 29), காசிபாளையம் சந்தை கடை புதூரை சேர்ந்த வெங்கடசாமி மகன் செல்வன் (51), கோபி புதுப்பாளையம் லோகு நாதன் மகன் சபாபதி (57), சத்தியமங்கலம் ரெங்க சமுத்திரம் மணி மகன் குப்புசாமி (40), கோபியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பி யாணன் (50), கதிர்வேல் மகன் கோபால் (47), கோபி வண்டிப்பேட்டை ராஜூ மகன் பிரகாஷ் (50), அதே பகுதியை சேர்ந்த பொன்னு ச்சாமி கவுண்டர் மகன் சக்தி என்ற சுரேஷ்குமார் (49), கோபி அங்குவிலாஸ் தெரு ராமசாமி மகன் குமார் (48), செல்லப்பா நகர் சுப்பிரமணி மகன் கணேஷ் குமார் (46), புது ஹாஸ்பிடல் ரோடு சையது முஸ்தபா மகன் ஜெபர் (59), பாரதி தெரு இப்ராஹிம் மகன் ஜெபர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 100 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com