மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Published on

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளி யம்பட்டி அடுத்த பவானிசாகர் பசுவா பாளையத்தை சேர்ந்த வர் ராமகிருஷ்ணன் (வயது 27). இவர் தொட்ட ம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

அப்போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மறு வாழ்வு முகாமை சேர்ந்த மோகன்ராஜ் (27) என தெரிய வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாலஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com