அந்தியூர் அருகே விவசாயி தற்கொலை

கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே விவசாயி தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மொடப்பள்ளி தோட்டத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர்.

கிருஷ்ணகுமார் உட ல்நிலை பாதிக்கப்பட்டு மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று உடல் வலி தாங்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.

இதையடுத்து தேன்மொழி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜீவபாரதி (22) அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com