என் மலர்
ஈரோடு
- பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் 3 பேரூராட்சி மற்றும் 8 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு ஊரில் நடக்கும் குற்ற நிகழ்வு குறித்து "வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி" கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர், கே.என்.பாளையம், பெரிய கொடிவேரி பேரூராட்சிகள் மற்றும் அரக்கன்கோட்டை, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ, சந்தேகத்தின் பேரில் புதிய நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டாலோ சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யத்தில் தகவல் கொடுக்கு மாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்க ளுக்கு போலீசார் அறிவுறுத்தி பேசினர்.
தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்போர் குறித்து தகவல் தெரியும் பட்சத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ள ப்பட்டது. மது போதையில் பொதுமக்களிடத்திலோ, பொது இடங்களிலோ இடையூறு மற்றும் தகராறில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசில் தலைவர்கள் தகவல் கொடுக்க வேண்டுமாறு நிகழ்ச்சியில் போலிசார் பேசினர்.
இந்த குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.
- சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
- சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அழுகுளி பிள்ளையார் கோயில் துறையில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 66). இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
இதையடுத்து உறவினர்கள் சரஸ்வதியை கோபி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ரகுநாதன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வினோத்குமார் (வயது 31), நசியனூர் வேலுச்சாமி மனைவி வாணிஸ்வரி (37), வீரப்பன்சத்திரம் வெள்ளியங்கிரி மகன் கணேஷ் (23) ஆகியோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்து 400 மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கரிவராஜ பெருமாள் கோவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
மேலும் கோவி லில் திருப்பணிகள் நடை பெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள். கருடாழ்வார். ஆஞ்சநேயர். கிருஷ்ணர் பாமா ருக்மணி. மற்றும் கோபுரங்கள் அத்தி மரத்தி னால் சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் தாசர்களுக்கு அரிசி பருப்பு, புளி உள்ளி ட்ட பொருட்களை கொடுத்து வழிபட்டனர்.
- சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்களை இழிவாக பேசினார்.
- இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழாவையொட்டி அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசினார்.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக வேண்டும் பா.ஜனதா வற்புறுத்தியதால் தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி முறிவு ஏற்பட்டது. இந்த முடிவிற்கு தமிழக முழுவதும் அ.தி.மு.க. மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா காலகட்டத்திலேயே பல லட்ச ரூபாய் நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருந்தாலும் கூட அதற்காக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை பொறுத்து போனார்.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையின் வயது கூட இல்லாத சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியோர் பற்றி இழிவாக பேசினார்.
இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி முறிவு குறித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியினர் கருத்து கூறாத நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தற்போது கூறிய கருத்து இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
- மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி சந்தைப்பேட்டை விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24-வது நாள் முடிவடைந்ததையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
இதில் விநாயகர், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு நவ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மதியம் 12 மணியளவில் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விளையாட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.
- மழைநீருடன் கழிவு நீர் சாலையில், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது.
- இதனால் மாணவ, மாணவிகள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு பகுதி வேடர் காலனி மற்றும் காமராஜர் சாலையில் பெய்த மழை யால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து, மெயின் ரோட்டில் ஆற்று வெள்ளம் போல் காட்சி அளித்தது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதுப்பாளையத்தில் இருந்து சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும் புதிதாக 10 அடி ஆழத்தில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது.
அங்கிருக்கும் தண்ணீரை வேறு பக்கம் திருப்பாமல், அந்தியூரில் உள்ள இரண்டடி சாக்கடை கால்வாயில் இணைத்துள்ளார்கள். 10 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயை வெறும் 2 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் இணைத்ததின் காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் சாலையில், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது.
இதனால் மாணவ, மாணவிகள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி யில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இது குறித்து 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வ நாதன் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது, சீதாலட்சுமி தியேட்டரில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலும் புதிதாக அமைத்துள்ள சாக்கடை கால்வாய் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
அதில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரையிலும் புதிதாக சாக்கடை கால்வாய் அமைத்து தண்ணீர் வெளி யேறாமல் செல்வத ற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் இது தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் இடத்தில் முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளோம் என்று தெரிவித்தனர்.
- காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
- இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு காவிரி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
இந்த சாலை வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம் மற்றும் சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன.
அதேப்போல் சேலம், சென்னையில் இருந்து இந்த வழியாக தான் ஈரோடுக்கு பஸ்கள் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் சாலை இருபுறமும் நூற்றுக்க ணக்கான நகை, ஜவுளி க்கடைகள், வணிக நிறுவன ங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதேபோல் இந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளன. இதனால் காவிரி சாலை பகுதி எப்போதும் மக்கள் நிறைந்து பரபர ப்பாக காட்சி அளிக்கும்.
இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் நடந்து சேதமடைந்த ரோடுகள் சரி செய்யப்பட்டு புதிதாக தார் சாலை அமை க்கப்பட்டுள்ளது.
இந்நிலை யில் சாலை நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்புகள் வைக்கப்ப ட்டன. அதாவது காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் முதல் வாய்க்கால் பாலம் வரை சாலையின் நடுவே தடுப்பு கள் அமைக்க ப்பட்டுள்ளன.
இதில் காந்தி சிலை அருகே தடுப்புகள் இடைவெ ளி இன்றி உள்ளது. இந்த பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதேப்போல் அல் அமீன் ஸ்கூல் மற்றும் அதன் எதிர்ப்புறம் உள்ள அரசு பள்ளி உள்ளது.
இந்த பகுதியிலும் தடுப்புகளில் இடைவேளை விடப்பட வில்லை. அங்குள்ள பெ ட்ரோல் பங்க் பகுதிகளிலும் தடுப்புகளில் இடைவெளி வைக்கவில்லை.
இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த பகுதியை கடக்க நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளதாக கூறியுள்ளனர்.
இது குறித்து 40-வது வார்டு கவுன்சிலர் வக்கீல் ரமேஷ் குமார் கூறும்போது,
ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக காவிரி சாலை உள்ளது. இந்த பகுதியில் 3 பள்ளிகள், நூற்றுக்கணக்கான ஜவுளி, நகை கடை கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
காந்தி சிலை அருகே, அல் அமீன் ஸ்கூல், அரசு பள்ளி மற்றும் பெட்ரோல் பங்க் பகுதிகளில் மட்டும் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும் என கோரி க்கை வைக்கின்றோம்.
ஏனென்றால் இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இது பயனு ள்ளதாக இருக்கும். இல்லையெ ன்றால் நீண்ட தூரம் அவர்கள் சுற்ற வேண்டியிருக்கும்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த பகுதிகளில் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும். இதேபோல் இங்கு அரசு பள்ளி மற்றும் எதிரில் அல் அமீன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ ர்கள் பெற்றோர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.
- லாரி நள்ளிரவு தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
- இதில் லாரியின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அண்ணா மடுவு வரை சாலையின் நடுவே தடுப்பு சுவர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பஸ் நிலையத்தில் இருந்து பழைய பெட்ரோல் பங்க் வரையில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் இருந்து தர்மபுரிக்கு கூல்டிரிங்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த லாரி நள்ளிரவு 12 மணி அளவில் ஸ்டேட் பாங்க் அருகே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் லாரியின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது. வேறு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து இன்று காலை வேறொரு லாரியின் மூலம் கூல்ட்ரிங்க்ஸ் மாற்றி அனுப்பப்பட்டு பின் லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
- கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள நரிப்பாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார், வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டரா? என விசாரித்து வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பழனிசாமி மீது மோதி விட்டது.
- இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.
பெருந்துறை:
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் ஓடக்காட்டைச் சேர்ந்த கருப்பன் மகன் பழனிசாமி (வயது 50). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி.
இவர் கடந்த 27-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.33 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வர த்தை காட்டிலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.33 அடியாக சரிந்து உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1,511 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தி ற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 24.71 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 11.48 அடியாகவும், வரட்டு ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98அடியாகவும் உள்ளது.






