என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Body of a man"

    • பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே மடவிளாகம், நந்தவனக்காடு பகுதியில் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீசாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கும் எனவும், பெயா், முகவரி போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள நரிப்பாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.

    தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார், வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டரா? என விசாரித்து வருகின்றனர்.

    ×