என் மலர்
நீங்கள் தேடியது "The truck crashed into"
- லாரி நள்ளிரவு தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
- இதில் லாரியின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அண்ணா மடுவு வரை சாலையின் நடுவே தடுப்பு சுவர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பஸ் நிலையத்தில் இருந்து பழைய பெட்ரோல் பங்க் வரையில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் இருந்து தர்மபுரிக்கு கூல்டிரிங்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த லாரி நள்ளிரவு 12 மணி அளவில் ஸ்டேட் பாங்க் அருகே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் லாரியின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது. வேறு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து இன்று காலை வேறொரு லாரியின் மூலம் கூல்ட்ரிங்க்ஸ் மாற்றி அனுப்பப்பட்டு பின் லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.






