என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மழைநீருடன் கழிவு நீர் சாலையில், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது.
    • இதனால் மாணவ, மாணவிகள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு பகுதி வேடர் காலனி மற்றும் காமராஜர் சாலையில் பெய்த மழை யால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து, மெயின் ரோட்டில் ஆற்று வெள்ளம் போல் காட்சி அளித்தது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதுப்பாளையத்தில் இருந்து சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும் புதிதாக 10 அடி ஆழத்தில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது.

    அங்கிருக்கும் தண்ணீரை வேறு பக்கம் திருப்பாமல், அந்தியூரில் உள்ள இரண்டடி சாக்கடை கால்வாயில் இணைத்துள்ளார்கள். 10 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயை வெறும் 2 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் இணைத்ததின் காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் சாலையில், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது.

    இதனால் மாணவ, மாணவிகள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி யில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    இது குறித்து 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வ நாதன் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது, சீதாலட்சுமி தியேட்டரில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலும் புதிதாக அமைத்துள்ள சாக்கடை கால்வாய் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

    அதில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரையிலும் புதிதாக சாக்கடை கால்வாய் அமைத்து தண்ணீர் வெளி யேறாமல் செல்வத ற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

    மேலும் இது தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் இடத்தில் முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு காவிரி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.

    இந்த சாலை வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம் மற்றும் சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன.

    அதேப்போல் சேலம், சென்னையில் இருந்து இந்த வழியாக தான் ஈரோடுக்கு பஸ்கள் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த பகுதியில் சாலை இருபுறமும் நூற்றுக்க ணக்கான நகை, ஜவுளி க்கடைகள், வணிக நிறுவன ங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதேபோல் இந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளன. இதனால் காவிரி சாலை பகுதி எப்போதும் மக்கள் நிறைந்து பரபர ப்பாக காட்சி அளிக்கும்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் நடந்து சேதமடைந்த ரோடுகள் சரி செய்யப்பட்டு புதிதாக தார் சாலை அமை க்கப்பட்டுள்ளது.

    இந்நிலை யில் சாலை நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்புகள் வைக்கப்ப ட்டன. அதாவது காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் முதல் வாய்க்கால் பாலம் வரை சாலையின் நடுவே தடுப்பு கள் அமைக்க ப்பட்டுள்ளன.

    இதில் காந்தி சிலை அருகே தடுப்புகள் இடைவெ ளி இன்றி உள்ளது. இந்த பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதேப்போல் அல் அமீன் ஸ்கூல் மற்றும் அதன் எதிர்ப்புறம் உள்ள அரசு பள்ளி உள்ளது.

    இந்த பகுதியிலும் தடுப்புகளில் இடைவேளை விடப்பட வில்லை. அங்குள்ள பெ ட்ரோல் பங்க் பகுதிகளிலும் தடுப்புகளில் இடைவெளி வைக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த பகுதியை கடக்க நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளதாக கூறியுள்ளனர்.

    இது குறித்து 40-வது வார்டு கவுன்சிலர் வக்கீல் ரமேஷ் குமார் கூறும்போது,

    ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக காவிரி சாலை உள்ளது. இந்த பகுதியில் 3 பள்ளிகள், நூற்றுக்கணக்கான ஜவுளி, நகை கடை கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

    காந்தி சிலை அருகே, அல் அமீன் ஸ்கூல், அரசு பள்ளி மற்றும் பெட்ரோல் பங்க் பகுதிகளில் மட்டும் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும் என கோரி க்கை வைக்கின்றோம்.

    ஏனென்றால் இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இது பயனு ள்ளதாக இருக்கும். இல்லையெ ன்றால் நீண்ட தூரம் அவர்கள் சுற்ற வேண்டியிருக்கும்.

    பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த பகுதிகளில் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும். இதேபோல் இங்கு அரசு பள்ளி மற்றும் எதிரில் அல் அமீன் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ ர்கள் பெற்றோர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    • லாரி நள்ளிரவு தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இதில் லாரியின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அண்ணா மடுவு வரை சாலையின் நடுவே தடுப்பு சுவர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பஸ் நிலையத்தில் இருந்து பழைய பெட்ரோல் பங்க் வரையில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் இருந்து தர்மபுரிக்கு கூல்டிரிங்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த லாரி நள்ளிரவு 12 மணி அளவில் ஸ்டேட் பாங்க் அருகே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் லாரியின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது. வேறு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து இன்று காலை வேறொரு லாரியின் மூலம் கூல்ட்ரிங்க்ஸ் மாற்றி அனுப்பப்பட்டு பின் லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள நரிப்பாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.

    தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார், வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டரா? என விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பழனிசாமி மீது மோதி விட்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் ஓடக்காட்டைச் சேர்ந்த கருப்பன் மகன் பழனிசாமி (வயது 50). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 27-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.33 அடியாக சரிந்து உள்ளது.
    • அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வர த்தை காட்டிலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.33 அடியாக சரிந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1,511 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தி ற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 24.71 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 11.48 அடியாகவும், வரட்டு ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98அடியாகவும் உள்ளது.


    • நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.பி.பி.நகர் ஜனதா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 58). நகைப்பட்டறை தொழிலாளி. இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    இதனால் அவர் நான் உயிருடன் இரு ந்து என்ன பயன்? என்று புலம்பி வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

    சம்பவத்தன்று நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார். பிறகு அவர் வேலை செய்த நகை ப்பட்டறையில் சென்று தூங்கினார்.

    இந்த நிலையில் நாகேந்திரனை தேடி நகைப்பட்டறைக்கு சென்ற அவரது மகன் சந்திரபிரகாஷ் தனது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் விஷத்தை குடித்து விட்டதாக நாகேந்திரன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை சந்திரபிரகாஷ் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாகேந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    எனினும் சிகிச்சை பலனளி க்காமல் நாகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார்.
    • அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அண்ணா துரைக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்ட தால் குடித்து விட்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று ராஜேஸ்வரி கண்டி த்து உள்ளார்.

    இதனால் அண்ணாதுரை கோபித்து கொண்டு சின்ன செட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அவ்வபோது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார். அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.

    அக்கம் பக்கத்தினர், அண்ணாதுரையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அண்ணாதுரை இறந்து விட்டதாக தொிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகன ஓட்டிகள் தலமலை வனச்சாலையை பயன்படுத்தி கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • கர்நாடகாவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டுமே சென்றன.

    சத்தியமங்கலம்:

    தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அன்றைய தினம் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    அதன்படி சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் இருந்து கர்நாடக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதேபோல் சரக்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்புகள் அறிவித்து இருந்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான தாளவாடி அடுத்த ராமாபுரம், கும்டாபுரம், பாரதிபுரம் எடத்திகட்டை, அருள்வாடி, காரப்பள்ளம், கேர்மாளம் ஆகிய மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் இன்று காலை 6 மணி முதல் கர்நாடகாவில் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.

    சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகன ஓட்டிகள் தலமலை வனச்சாலையை பயன்படுத்தி கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பண்ணாரி தாளவாடி வழியாக தினமும் இயக்கப்பட்டு வந்த 9 தமிழக அரசு பஸ்கள் இன்று சத்தியமங்கலம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு செல்ல வந்த பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    அதேபோல் கர்நாடகாவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டுமே சென்றன. அங்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் புளிஞ்சூர் சோதனை சாவடியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதேபோல் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக வரட்டுபள்ளம் சோதனை சாவடி, பர்கூர் போலீஸ் நிலைய சாவடி, கர்கே கண்டி ஆகிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தியூரில் இருந்து மைசூருசெல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் கர்நாடகா-தமிழக எல்லை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.
    • வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள்

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்களின் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் சுற்று வட்டார கிராம பகுதகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்த அச்சத்தை போக்கும் வகையில் சென்னிமலை அருகே கே.ஜி. வலசு, ஈங்கூர், சிறு க்களஞ்சி உள்பட பல்வேறு இடங்களில் இரவு முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.

    தொடர்நது கிராமப்பு ற ங்களில் தனி யாக உள்ள வீடுகள், வய தான தம்பதி கள் வசிக்கும் வீடுகள் மற்று ம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள் உள்ள பகுதிகளிலும் இரவு நேரங்களில் போலீசார் சென்று பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    இதற்காக ''ஸ்மார்ட் காவலர்'' என்ற செல்போன் செயலி போலீசாரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்தந்த பகுதியில் இருந்து போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்ற வேண்டும்.

    இதன் மூலம் எந்த போலீசார் எந்த இடத்தில் இருந்து எத்தனை மணிக்கு ரோந்து பணியின் போது போட்டோ எடுத்து உள்ளார் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.

    வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிய நள்ளிரவு நேரத்திலும் அவர்களை எழுப்பி புகைப்படம் எடுத்து செயலி மூலம் பதிவேற்றி வருகின்றனர்.

    கிராமப்புறங்க ளில் போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆ னந்த் (42). இவரது மனைவி பிரேமா (32). இவர்கள் அதேபகுதியில் கடந்த 13 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன் ஆனந்துக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக ஆனந்த மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மனைவி பிரேமா அவரிடம் மருத்துவமனைக்கு போகலாம் என கேட்டதற்கு வேண்டாம் என ஆனந்த் கூறிவிட்டார்.

    இந்த நிலை யில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வழக்கம் போல ஓட்டலை பூட்டி விட்டு அங்கேயே கணவன்-மனைவி 2 பேரும் படுத்து தூங்கியுள்ளனர்.

    தொடர்ந்து அதிகாலை 4.30 மணிய ளவில் பிரேமா கண் விழி த்து பார்த்தபோது அருகில் ஆனந்த் இல்லாததால் பக்கத்து அறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலை மை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஆனந்த் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.45 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,895 மூட்டைகளில் 1,89,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.75.89-க்கும், அதிகபட்சமாக, ரூ.81.15-க்கும் விற்பனையாயின.

    2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30.91-க்கும், அதிகபட்சமாக ரூ.76.99-க்கும் விற்பனையாயின.

    மொத்தம் ரூ.1.45 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    ×