சாலை விரிவாக்க பணி ஆய்வு

அந்தியூர் அண்ணாமடுவில் இருந்து பஸ் நிலையம் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.சாலை பணியாளர்கள் உதவியோடு அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
சாலை விரிவாக்க பணி ஆய்வு
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணாமடுவில் இருந்து பஸ் நிலையம் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் அந்தியூர் தவிட்டுப்பாளையம் இணைக்கும் பாலம் அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து பாலத்தின் இருபுறங்களிலும் சாலையை அகலப்படுத்த நில அளவையாளர் நடராஜ், அம்மாபேட்டை நில அளவையாளர் மகேஸ்வரி, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறி யாளர் சதாசிவம், நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ. கிருஷ்ணசாமி, ரமேஷ், செல்வம் மற்றும் சாலை பணியாளர்கள் உதவியோடு அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளவர் களையும், அதனை அகற்ற வலியுறுத்தி வருகின்றார்கள். இதனால் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் ஒரு வித பரபரப்பு நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com