என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது.
    • மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது. இதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகளின் வரத்து அதிகமாக இருந்தது.

    குறிப்பாக சிந்து கறவை மாடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதன் விலையும் சற்று உயர்ந்து விற்பனையானது.

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்து நாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளைம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், 120 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இனத்தை சேர்ந்த 110 கறவை மாடுகளும், 150 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரையிலும் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்னையானது.

    முதல் தர சிந்து கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

    சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுக் குட்டிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி சென்றனர்.

    • பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனி க்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி 2-ம் சனிக்கிழ மையை யொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம் பகுதி பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கா ல் ஸ்ரீதேவி பூதேவி கரி வரத ராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமி க்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் மலையை சுற்றி சுவாமியை தேரில் இழுத்து வலம் வந்தனர்.

    மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில்,

    அழுக்குளி பெருமாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்க ளுக்கு துளசி தீர்த்தம் பிர சாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் வெள்ளையம்பாளையம் சின்னத்தம்பி பாளையம் அண்ணா மடுவு கந்த ம்பாளையம், பச்சாம் பாளை யம்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதையொட்டி கவுந்தப்பாடி சந்தைபேட்டை பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்தர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதுகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் பு.புளி யம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனை த்து பெருமாள் கோவில்களி லும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்கார செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் பலர் பெருமாளை குல தெய்வ மாக நினைத்து வணங்கி வருகிறார்கள். இதனால் பக்தர்கள் பலர் மஞ்சள், வேட்டி துண்டு அணிந்தும் மற்றும் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.

    தொடர்ந்து அவர்கள் 4-ம் சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் சென்று விரதத்தை முடிப்பார்கள். இதே போல் பக்தர்கள் பலர் வீடுகளில் அறுசுவை உணவு சமைத்து பெருமாளுக்கு படைத்து வணங்குகிறார்கள்.

    • அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    அப்போது கொங்கர்பா ளையம், கணக்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த அந்தி யூர் ஏ.டி. காலனியை சேர்ந்த சாமிதுரை மகன் உத்தரசாமி (வயது 44),

    கொங்கர்பா ளையம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ராக்கன் மகன் கிட்டன் (55), கோபி செட்டிபாளையம் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் ரவி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் கோபி குப்பமேடு டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திரு ப்பூர் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அஜய்குமார் (25) என்பவர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.
    • கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களை வாழ வைத்துக் கொண்டுள்ள பவானி ஆறு மற்றும் பவானிசாகர் அணையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சியை எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சுமார் ஒரு கோடி பொதுமக்களின் குடிநீர், வாழ்வாதாரம் மற்றும் 4 லட்சம் ஏக்கர் பயிர்சாகு படிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கோடை காலத்தில், தென்மேற்கு பருவமழை பெய்யாத காலங்களில் கூட 2000 கனஅடிக்கும் அதிகமான அளவு தண்ணீர் வீணாக கடலை நோக்கி செல்வதாக நேரில் பார்த்து வந்த விவசாய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் வீணாக கடலுக்குள் செல்லும் பாண்டியாற்றை - பவானிசாகருக்கு வரும் மோயாற்றுடன் இணைக்க வேண்டும் என்ற 60 ஆண்டுகள் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

    இதனைத்தொடர்ந்து பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.

    பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தின் சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படும் நன்மைகள், பாண்டியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேரடியாக பார்வையிட்ட போது ஓடிய தண்ணீர் அளவு உள்ளிட்ட விவரங்களை அப்போது விரிவாக எடுத்து கூறினர்.

    மேலும் இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள வேண்டி பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அப்போது பணி நிறைவு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் ஆசைத்தம்பி, கீழ்பவானி முறைநீர்ப்பாசன சங்க கூட்டமைப்பின் இணைச்செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பஞ்ச் பிபீ தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.
    • பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பாத்திமா நகரில் அமைந்துள்ள பஞ்ச் பிபீ தர்காவில் 4 ஆண்டுகள் கழித்து சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.

    இதில் காலை கொடியே ற்றத்துடன் தொடங்கிய சந்த னக்கூடு திருவிழாவானது இரவு 8 மணி அளவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இங்கு வருடம் தோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா காலத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட சந்தனக்கூடு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதில் சத்திய மங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, கோபி, ஈரோடு, பவானி, திருப்பூர், மேட்டூர், உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    4 ஆண்டுகள் கழித்து நடக்கும் சந்தனக்கூடு திருவிழா என்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    • மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வெங்கடாசலம் (வயது 59). இவரது மனைவி சரோஜா (51). வெங்கடாசலம் சம்பத் நகர் உழவர் சந்தை அருகே தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் உடல்நிலை பாதி க்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

    உடனே அக்கம் பக்க த்தினர் வெங்கடாசலத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் வெங்க டாசலம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சரோஜா ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் 3 பேரூராட்சி மற்றும் 8 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு ஊரில் நடக்கும் குற்ற நிகழ்வு குறித்து "வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி" கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர், கே.என்.பாளையம், பெரிய கொடிவேரி பேரூராட்சிகள் மற்றும் அரக்கன்கோட்டை, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ, சந்தேகத்தின் பேரில் புதிய நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டாலோ சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யத்தில் தகவல் கொடுக்கு மாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்க ளுக்கு போலீசார் அறிவுறுத்தி பேசினர்.

    தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்போர் குறித்து தகவல் தெரியும் பட்சத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ள ப்பட்டது. மது போதையில் பொதுமக்களிடத்திலோ, பொது இடங்களிலோ இடையூறு மற்றும் தகராறில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசில் தலைவர்கள் தகவல் கொடுக்க வேண்டுமாறு நிகழ்ச்சியில் போலிசார் பேசினர்.

    இந்த குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.

    • சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
    • சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அழுகுளி பிள்ளையார் கோயில் துறையில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 66). இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.

    இதையடுத்து உறவினர்கள் சரஸ்வதியை கோபி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ரகுநாதன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வினோத்குமார் (வயது 31), நசியனூர் வேலுச்சாமி மனைவி வாணிஸ்வரி (37), வீரப்பன்சத்திரம் வெள்ளியங்கிரி மகன் கணேஷ் (23) ஆகியோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்து 400 மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கரிவராஜ பெருமாள் கோவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவி லில் திருப்பணிகள் நடை பெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள். கருடாழ்வார். ஆஞ்சநேயர். கிருஷ்ணர் பாமா ருக்மணி. மற்றும் கோபுரங்கள் அத்தி மரத்தி னால் சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் தாசர்களுக்கு அரிசி பருப்பு, புளி உள்ளி ட்ட பொருட்களை கொடுத்து வழிபட்டனர்.

    • சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்களை இழிவாக பேசினார்.
    • இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழாவையொட்டி அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசினார்.

    2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக வேண்டும் பா.ஜனதா வற்புறுத்தியதால் தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி முறிவு ஏற்பட்டது. இந்த முடிவிற்கு தமிழக முழுவதும் அ.தி.மு.க. மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    கொரோனா காலகட்டத்திலேயே பல லட்ச ரூபாய் நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருந்தாலும் கூட அதற்காக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை பொறுத்து போனார்.

    ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையின் வயது கூட இல்லாத சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியோர் பற்றி இழிவாக பேசினார்.

    இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டணி முறிவு குறித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியினர் கருத்து கூறாத நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தற்போது கூறிய கருத்து இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    • மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி சந்தைப்பேட்டை விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24-வது நாள் முடிவடைந்ததையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

    இதில் விநாயகர், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு நவ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 12 மணியளவில் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை விளையாட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    ×