வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பி ரமணி மகன் பசுபதி (வயது 28). இவரது மனைவி துர்கா நந்தினி (24). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆனால் இதுவரை குழ ந்தை இல்லை. இதனால் மன வேதனை அடைந்த பசுபதி அடிக்கடி மது அருந்துவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மரு த்துவர்கள் பசுபதி வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

பின்னர் துர்கா நந்தினி இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com