என் மலர்
நீங்கள் தேடியது "Erode V.U.C. 900 tons of"
- மார்க்கெட்டிற்கு 900 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
- தக்காளி இன்று 8 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தாளவாடி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் பல அசைவ பிரியர்கள் தற்போது சைவத்துக்கு மாறி விட்டனர். இதனால் காய்கறி களின் தேவை அதிகரித்துள்ளது.
இதேபோல் தொடர் விசேஷங்கள், முகூர்த்த நாட்கள் வருகிறது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் காய்கறிகளின் தேவை அதிக ரித்துள்ளது. இந்த எதிரொ லியாக காய்கறிகள் விலை அதிகரித்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இன்று ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதியிலிருந்து 900 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தை விட சில காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து இருந்தாலும் மக்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
ஈரோடு வ.உ.சி. மார்க்கெ ட்டில் இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோ வருமாறு:- கத்திரி க்காய்-40-60, வெண்டைக்காய்-20, பிர்க்கங்காய்-70, பாவ க்காய்-40,
முள்ளங்கி-50, முருங்கைக்காய்-50, பச்சை மிளகாய்-40, சின்ன வெங்காயம்-60, பெரிய வெங்காயம்-45, கொத்த வரங்காய்-40, பட்ட வரை-40, கருப்பு அவரை-100, முட்டைகோஸ்-20, காலி பிளவர்-40, காளான்-60, கேரட்-60, பீட்ரூட்-70, பீன்ஸ்-90, உருளைக்கிழ ங்கு-40, பழைய இஞ்சி-290, புதிய இஞ்சி-120, தக்காளி-10-15.
தக்காளி இன்று 8 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த வாரத்தை விட ஒரு சில காய்கறிகளின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்த்துள்ளது.






