விஷ பூச்சி கடித்து மூதாட்டி சாவு

சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஷ பூச்சி கடித்து மூதாட்டி சாவு
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அழுகுளி பிள்ளையார் கோயில் துறையில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 66). இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.

இதையடுத்து உறவினர்கள் சரஸ்வதியை கோபி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ரகுநாதன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com