என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர் பேரூராட்சி பகுதியில்"

    • மழைநீருடன் கழிவு நீர் சாலையில், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது.
    • இதனால் மாணவ, மாணவிகள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு பகுதி வேடர் காலனி மற்றும் காமராஜர் சாலையில் பெய்த மழை யால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து, மெயின் ரோட்டில் ஆற்று வெள்ளம் போல் காட்சி அளித்தது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதுப்பாளையத்தில் இருந்து சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும் புதிதாக 10 அடி ஆழத்தில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது.

    அங்கிருக்கும் தண்ணீரை வேறு பக்கம் திருப்பாமல், அந்தியூரில் உள்ள இரண்டடி சாக்கடை கால்வாயில் இணைத்துள்ளார்கள். 10 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயை வெறும் 2 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் இணைத்ததின் காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் சாலையில், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது.

    இதனால் மாணவ, மாணவிகள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி யில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    இது குறித்து 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வ நாதன் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது, சீதாலட்சுமி தியேட்டரில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலும் புதிதாக அமைத்துள்ள சாக்கடை கால்வாய் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

    அதில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரையிலும் புதிதாக சாக்கடை கால்வாய் அமைத்து தண்ணீர் வெளி யேறாமல் செல்வத ற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

    மேலும் இது தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் இடத்தில் முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    ×