என் மலர்
ஈரோடு
சித்தூர் அருகே ரெயிலில் ஆந்திர மந்திரி உறவினர் உள்பட 4 பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு:
ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இதில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஆந்திர வனத்துறை மந்திரி சித்தா ராகவ ராவின் உறவுக்கார பெண் சர்மிளா பயணம் செய்தார். இவர் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த மந்திரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் ரெயில் சேலம் அருகே வந்தபோது ஆந்திர மந்திரியின் உறவினர் சர்மிளா உள்பட 3 பேரின் உடமைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
சர்மளாவின் உடமைகளில் 40 பவுன் நகை இருந்தது. மற்றவர்கள் உடமையில் லேப்டாப், செல்போன் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கி போலீசில் புகார் செய்தனர்.
இதேபோல மற்றொரு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த கவிதா ஜேம்ஸ் என்ற பெண்ணுக்கு தனது கைப்பை மாயமானது சேலம் ரெயில் நிலையத்தை ரெயில் கடந்த போது தான் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மாயமான கைப் பையில் 11 பவுன் நகை, ஏ.டி.எம்.கார்டுகள், 7500 ரொக்கப்பணம் இருந்ததாக கூறி உள்ளார்.
விசாரணையில் கொள்ளை சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், சித்தூருக்கும் இடையே நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகாரை சித்தூர் ரெயில்வே போலீசாருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் பயணம் செய்த பயணிகளின் விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.
பயணிகள் போல் சென்று கொள்ளையில் ஈடுபட்டார்களா? அல்லது ரெயில் சிக்னலில் நிற்கும் போது பெட்டியில் ஏறி கொள்ளையடித்து சென்றார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.

அந்தியூரில் 1½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அந்தியூரில் 1½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பவானி சாலை பகுதியில் வசிப்பவர் பரமேஸ்வரன் (வயது 38). இவரது மகன் வருணியன் (1½).
இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ரத்த பரிசோதனை எடுத்து பார்த்தபோது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே மேல் சிசிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வருண்யன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:
தமிழக கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவ கல்வியை பாதிக்கும் நீட் தேர்வை மத்திய-மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம், காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் நல்லுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டதை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சக்திவேல்பாண்டியன், மகாமூர்த்தி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நித்யா நன்றி கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அம்மாபேட்டை பகுதியில் மட்டும் 50.4 மி.மீ.மழை கொட்டியது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது.
நேற்று இரவு அம்மாபேட்டை பகுதியில் மட்டும் 50.4 மி.மீ.மழை கொட்டியது. இதே போல் பவானியிலும் 40 மி.மீட்டர் மழை பெய்தது.
இதே போல் தாளவாடி, கொடுமுடி, ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பாய்ந்து ஓடியது.
ஈரோடு நகரில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ந்தது. இந்த மழையால் அப்பகுதி குளுமையானது. வெப்பம் அடியோடு குறைந்தது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதையொட்டி ஈரோடு மாவட்ட விவசாயகளும் பொது மக்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே மானை விரட்டி சென்ற சிறுத்தை வாகனம் மோதி பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பலியான சிறுத்தை உடலை மீட்டனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ளது பண்ணாரி. இங்குள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
பண்ணாரியம்மன் கோவிலையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. மேலும் கோவில் அருகே வன சோதனை சாவடி உள்ளது. எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.
இன்று (வெள்ளிக் கிழமை) அதிகாலை 3 மணி அளவில் வனசோதனை சாவடி அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மானை வேட்டையாட அதை விரட்டியபடி ஒரு பெண் சிறுத்தை பாய்ந்து சென்றது.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அந்த சிறுத்தை மீது மோதியது. இதில் அந்த சிறுத்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். வாகனம் மோதி பலியான சிறுத்தை உடலை மீட்டனர்.
பிறகு அதனை காராச்சி கோரை வனசோதனை சாவடி கொண்டு சென்று அங்கு கால்நடை டாக்டரால் உடல் பரிசோதனை செய்யப் பட்டது. பிறகு அங்கேயே குழி தோண்டி சிறுத்தை உடல் புதைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் டெங்கு நோய்க்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர் என்று முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஈரோடு:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் இன்று ஈரோடு வந்தனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
அவர்களுடன் சுகாதாரத் துறை மாநில முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வந்திருந்தார்.
ஆய்வு பணிக்கு பிறகு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்கு நோயை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது டெங்கு நோயால் யாரும் பீதி அடைய வேண்டாம். டெங்கு நோயை குணப்படுத்த முடியும்.

டெங்கு நோயை பரப்பும் கொசு நல்ல தண்ணீரில்தான் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் தண்ணீரை சேமித்து வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
எந்த பாத்திரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதை பத்திரமாக மூடி வையுங்கள் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நில வேம்பு குடிநீரை தொடர்ந்து அருந்தி வாருங்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகுங்கள்.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு நோயை கட்டுப்படுத்த 25 ஆயிரம் கள பணியாளர்கள் உள்ளனர். 3500 சுகாதார அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டெங்கு நோய்க்கு இதுவரை தமிழ்நாட்டில் 35 பேர் பலியாகி உள்ளனர். இதில் 15 பேர் நேரிடையாகவும் மீதிபேர் டெங்கு பாதிப்பு இதர நோய்களால் இறந்து உள்ளனர்.
டெங்கு நோயை கட்டுப்படுத்த முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடுஅரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை அமைச்சர்கள் விஜய பாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முன்னதாக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறும். இதன் முதல் பகுதியாக மாணவ- மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டியை தொடங்கி வைத்துள்ளோம்.

மறைந்த முதல்வர் அம்மா நல்லாசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து எந்த தொய்வின்றி ஆட்சி நடக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.
மேலும் இந்த தீர்மானத்தில் நீங்கள் கையெழுத்து போடவில்லையே என்று கேட்டதற்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிரித்தபடி பதில்கூற மறுத்து விட்டார்.

அம்மாபேட்டை அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் சாலைமறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 7 மாணவிகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபு என்பவர் கடந்த 6-ந் தேதி திருப்பூரில் நடந்த கபடி போட்டிக்கு அழைத்துச் சென்றார். போட்டி முடிந்ததும் மாணவிகளை ஊருக்கு திரும்ப பஸ்சில் கூட்டிவந்தார். அப்போது 6 மாணவிகள் 2 இருக்கைகளில் அமர்ந்துகொள்ள, இடம் இல்லாமல் மாணவி ஒருவர் உடற்கல்வி ஆசிரியர் அமர்ந்த இருக்கையின் அருகில் உட்கார்ந்து வந்தார். அப்போது பிரபு அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி வீட்டுக்கு வந்ததும் மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறினார். மேலும் மாணவிக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுடன் பள்ளிக்கு திரண்டு சென்று, உடற்கல்வி ஆசிரியர் பிரபுவிடம் இதுபற்றி கேட்கவேண்டும் என்றார்கள். அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் மறுத்ததால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் அம்மாபேட்டை ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள், ‘சம்பந்தப்பட்ட ஆசிரியரை எங்களிடம் ஒப்படைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்’ என்றார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து அதிவிரைவுப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைத்தார்கள்.
இந்தநிலையில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பிரபுவை அம்மாபேட்டை போலீசார் நேற்று காலை கைது செய்து, பவானி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்கள். பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் பிரபு ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது பள்ளி நிர்வாகத்தினர் உடற்கல்வி ஆசிரியர் பிரபுவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பிரபுவுக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தை உள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக அம்மாபேட்டை கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையொட்டி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது. அப்பகுதியில் மட்டும் 65 மி.மீ.மழை கொட்டியது.
இதே போல் சென்னிமலை, தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பாய்ந்து ஓடியது.
ஈரோடு நகரில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. புறநகர் பகுதிகளான மூலப்பாளையம், ஆணைக்கல்பாளையம், முள்ளாம்பரப்பு, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்த மழையால் அப்பகுதி குளுமையானது. வெப்பம் அடியோடு குறைந்தது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதையொட்டி ஈரோடு மாவட்ட விவசாயகளும் பொது மக்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் மழை கனமழையாக பெய்யவும் வருண பகவானை வேண்டி வருகின்றனர்.

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக 52 அடியாக இருந்த நீர் மட்டம், இன்று 53 அடியை தொட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பவானிசாகர் அணை நீர்பிடிப்பு யிலும் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1950 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1000 கன அடிக்கு மேல் தொடர்ந்து தண்ணீர் வருவதையொட்டி அணையின் நீர்மட்டமும் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.
நேற்று 52 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், இன்று 53 அடியை தொட்டது. பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 165 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கோவை-பொள்ளாச்சியில் இருந்து வந்த 2 கார்கள் ஒரே இடத்தில் பாலத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் அந்தியூர்-குருநாதசாமி கோவில் ஆடி தேர்த் திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த 6 நண்பர்கள் ஒரு காரில் நேற்று இரவு அந்தியூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 27), சரவணன் (24), சுரேஷ் (33), சிவகுமார் (27), முஜிபுர் ரகுமான் (20), சஞ்சீவ் (20) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். சரவணன் காரை ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 12 மணி அளவில் கார் கோபி அருகே உள்ள கருங்கரடு என்ற இடத்தில் ஒரு வளைவு பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் பாலத்தில் மோதி பாலத்தின் கீழ் தலைகீழாக விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே சுப்பிரமணியம் என்பவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்தும் ஒரு காரில் 5 பேர் அந்தியூர் குருநாதசாமி கோவிலுக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.
காரை மணிகண்டன் (25) என்பவர் ஓட்டி வந்தார். லட்சுமணன் (25). சித்தார்த் (24), அனீஸ் (23), வினோத்குமார் (21) ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த காரும் கோபி அருகே உள்ள கருங்கரடு வளைவு பாலத்தில் இரவு வந்தபோது அதே பாலத்தில் மோதி பாலத்தின் கீழ் தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது.
இதில் 5 பேரும் படுகாயத்துடன் துடித்தனர். உடனே அவர்களும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஒரே பாலத்தில் இரு கார்களும் மோதி கவிழ்ந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு அருகே 8-ம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் புனித இஞ்ஞாசியர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் சகாய டேனியல் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம்பாளையம், ஆனந்தம்பாளையம், சித்தார், குதிரைக்கல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலை 10.30 மணி அளவில் திடீரென அங்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ‘பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபு, மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அவரை இங்கு வரச்சொல்லுங்கள்’ என்று கூறினர். அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், ‘அந்த ஆசிரியர் இன்று (அதாவது நேற்று) பள்ளிக்கு வரவில்லை’ என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கல் வீசி பள்ளி அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்தனர். இதன் காரணமாக பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ-மாணவிகளை வெளியே அனுப்பி பள்ளியை மூடினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பகல் 11 மணி அளவில் அம்மாபேட்டை-அந்தியூர் செல்லும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு சென்று பொதுமக்களை அழைத்து பள்ளி வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் பிரபு, இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்பட 6 பேரை திருப்பூருக்கு கபடி போட்டிக்காக பஸ்சில் அழைத்துச் சென்றார். போட்டி முடிந்ததும் அன்று இரவு ஊரில் விட்டு சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவி பெற்றோரிடம், ‘பஸ்சில் வைத்து உடற்கல்வி ஆசிரியர் பிரபு என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார்’ என்று கூறி கதறி அழுதார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் மறுநாள் காலை பள்ளி நிர்வாகத்தை போனில் தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறி அந்த ஆசிரியரை கண்டிக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் அந்த ஆசிரியரை கண்டித்தனர். இதனால் கோபம் அடைந்த அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து, ‘ஏன் என்னை பற்றி வீட்டிலும், பள்ளி நிர்வாகத்திலும் புகார் செய்தாய்’? என்று திட்டியுள்ளார். அதனால் மனம் உடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விஷம் குடித்துவிட்டார்.
பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் மாணவி கவலைக்கிடமாக இருந்ததால் அங்கிருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனால் மாணவியிடம் தகாத முறையில் நடந்த உடற்கல்வி ஆசிரியர் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இங்கு வர சொல்லுங்கள். நாங்கள் அவரிடம் ஏன் மாணவியிடம் தகாத முறையில் நடந்தாய்? என்று கேட்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், ‘அவர் பள்ளியில் இல்லை. வெளியே சென்றுவிட்டார். அவர் வரமாட்டார்’ என்றனர்.
அதற்கு பொதுமக்கள், ‘அந்த ஆசிரியர் வந்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர். ஆனால் அதை பள்ளி நிர்வாகத்தினர் ஏற்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மதியம் 2 மணிக்கு அம்மாபேட்டை சென்று மேட்டூர்-பவானி செல்லும் அந்தியூர் பிரிவு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து போலீசார் ஈரோட்டில் இருந்து அதிவிரைவுப்படை, ஆயுதப்படை போலீசாரை வரவழைத்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இதன்காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நிலவுகிறது. இந்தநிலையில் உடற்கல்வி ஆசிரியர் பிரபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.