என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடுஅரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை அமைச்சர்கள் விஜய பாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    முன்னதாக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

    ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறும். இதன் முதல் பகுதியாக மாணவ- மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டியை தொடங்கி வைத்துள்ளோம்.


    மறைந்த முதல்வர் அம்மா நல்லாசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து எந்த தொய்வின்றி ஆட்சி நடக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.

    மேலும் இந்த தீர்மானத்தில் நீங்கள் கையெழுத்து போடவில்லையே என்று கேட்டதற்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிரித்தபடி பதில்கூற மறுத்து விட்டார்.
    Next Story
    ×