என் மலர்
ஈரோடு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி. வி. தினகரன் எம்.எல்.ஏ. தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசி வருகிறார்.
நீலகிரி மாவட்டம் கோத்திகிரியில் இருந்து தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென நேற்று இரவு வந்தார்.
அவரை அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். தினகரன் எம்.எல்.ஏ.வை கோவிலில் பார்த்ததும் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் அவரை நோக்கி கையசைத்தனர்.
அவரும் பதிலுக்கு கையசைத்தார். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டினர். தினகரனும் பக்தர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
பிறகு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
ஏற்கனவே பண்ணாரி அம்மன் கோவிலுக்கு நான் வந்திருக்கிறேன். பண்ணாரி அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் என்றும் தெரியும். ஆகவே இங்கு வந்து தங்கத்தேர் இழுத்து அம்மனை வழிபட்டேன்.
இடைத்தேர்தலில் நான் பெற்ற வெற்றியை தமிழக மக்களே கொண்டாடுகிறார்கள். ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். நான் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்து என்னை வரவேற்று உற்சாகப்படுத்துகிறார்கள்.
மக்களின் ஆவலை பூர்த்தி செய்ய முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர். செல்வம் (ஈரோடு), முன்னாள் எம்.பி. சிவசாமி (திருப்பூர்) ஆகியோர் வந்திருந்தனர். #TamilNews #TTVDhinakaran
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 56). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி. இவரது மனைவி பெயர் ராஜாமணி (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது.
கணவன்-மனைவியும் திருமண விழாவில் சமையல் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு 8 மணியளவில் கணவன் - மனைவி இருவரும் ரெங்கம் பாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்துக்கு சென்றனர். திடீரென இருவரும் கை கோர்த்தபடி அந்த ரெயில் முன் பாய்ந்தனர்.
இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்தி முதல் கட்ட விசாரணையில் மாதேஸ்வரன் காசநோயால் அவதிப்பட்டு வந்தாராம். எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாராம். மேலும் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.
மேலும் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்பட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கமும் அந்த தம்பதியை வாட்டி வந்தது. இதனால் மாதேஸ்வரன் வாழ்வதை விட சாகலாம் என்று மனைவியிடம் கூறி வந்தாராம்.
“நானும் உங்களுடன் “செத்து விடுகிறேன்” என்று மனைவி ராஜாமணியும் அழுதபடி கூறி உள்ளார். இதையொட்டி கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று இரவு ஓடும் ரெயில் முன் கைகோர்த்தபடி பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்த கணவன்-மனைவி உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. ஆஸ்பத்திரி முன் அவர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தியபடி உள்ளனர். #tamilnews
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள திங்களூர், வெட்டையன்கிணர் ரோடு, கொட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 56).
இவருக்கு சொந்தமான தோட்டம், அதே பகுதியில் உள்ள ஒட்டச்சிகாடு என்ற இடத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் தென்னை மற்றும் வாழை பயிரிட்டு உள்ளார்.
இவைகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காக நேற்று காலை துரைசாமி தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலையில் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டு கால்களை கட்டி ஒரு தென்னை மரத்தில் தலை கீழாக தொங்க விடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திங்களூர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் கோபி டி.எஸ்.பி. செல்வம், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் யசோதா ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற் கொண்டனர்.
கொலையுண்ட மூதாட்டியின் தலையில் கொலையாளி பாட்டிலால் பலமாக அடித்துள்ளார். மேலும் அருகில் கிடந்த கட்டைகளை உடைத்து மூதாட்டியின் வாயில் திணித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
அந்த மூதாட்டி வெளியூர் அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் சொத்து தகராறில் அவரை கொன்று பிணத்தை இங்கே கொண்டு வந்து போட்டு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் பேரில் விசாரணை நடக்கிறது. மேலும் அந்த மூதாட்டி யார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக திங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கொலையுண்ட மூதாட்டியின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த புகைப்படத்தை வைத்து அந்த மூதாட்டி தங்கள் பகுதியை சேர்ந்தவரா? என்று அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
ஈரோடு மற்றும் திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் பட்டுநூல் விலையை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கையினை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என 3 மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளாதபட்சத்தில் கைத்தறி நெசவாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குறித்து உள்ளனர்.
இன்று (புதன்கிழமை) கைத்தறி நெசவாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் கைத்தறிகள் இயங்கவில்லை. இப்பகுதிகளில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் கைத்தறி கூடங்கள் இப்போது ஓடாமல் வெறிச்சோடிபோய் கிடக்கிறது.
“வேலைநிறுத்தப் போராட்டத்தில் கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். ஆகவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் கொண்டு எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கைத்தறி நெசவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணை புதூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி. இவர் பூனாச்சி பகுதியில் பெண்கள் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு கவரிங் நகைகள் மற்றும் அலங்கார பொருட் களை வாடகைக்கு கொடுத்து வருகிறார். தினமும் பியூட்டி பார்லரை திறந்து மீண்டும் இரவில் பூட்டி விட்டு செல்வார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமதி வழக்கம் போல் பியூட்டி பார்லரை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை பியூட்டி பார்லர் வெளி கதவு உள் கதவு என அனைத்து திறந்து கிடந்தது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து கடை வழக்கமாக 9 மணிக்கு தான் திறக்கப்படும். ஆனால் அதற்கு முன்னதாக திறந்து இருக்கிறதே என சந்தேகம் அடைந்தனர்.
இது குறித்து சுமதியிடம் தெரிவித்தனர். சுமதி பியூட்டி பார்லருக்கு விரைந்து வந்து கடைக்கு சென்று பார்த்தார். அப்போது பொருட்கள் சிதறி கிடந்தது.
மேலும் கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் கொள்ளை போய் இருந்தது தெரிந்தது. அங்கு இருந்த உண்டியல் பணமும் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது. மர்ம ஆசாமிகள் இதை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். அதில் தை அமாவாசை மிகவும் விஷேசமானது. இந்த நாளில் புண்ணிய நதி ஓடும் கரைகளில் பக்தர்கள் குவிந்து தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.
தை அமாவாசை தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) 3 நதிகள் சங்கமிக்கும் ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறையில் அதிகாலை இருந்தே பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
குடும்பம், குடும்பமாக வந்திருந்த இவர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் படைத்து ஹோமங்கள் வளர்த்து தர்ப்பணம் செய்தனர்.
பிறகு அந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபட்டனர். முன்னதாக கூடுதுறையில் நீராடினார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தண்ணீர் குறைவாக இருந்ததால் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. பக்தர்கள் அந்த தண்ணீரில் நீராடி திதி கொடுத்தனர்.
ஒரு சிலர் ஆற்றில் தண்ணீர் ஓடும் ஆழமான பகுதிக்கு சென்று நீராடினர். அந்த பகுதிக்கு சென்று நீராட வேண்டாம் என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்களும், திருப்பூர், நாமக்கல், கோவை மாவட்ட பக்தர்களும் கூடுதுறையில் குவிந்தனர்.
பவானி கூடுதுறையில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தவர்களை படத்தில் காணலாம்.
அய்யப்ப பக்தர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். சபரிமலை சென்றவர்களும், சென்று திரும்பியவர்களும் கார், வேன், பஸ்களில் கூடுதுறைக்கு வந்து வழிபட்டனர்.
வழக்கமாக பவானி கூடுதுறையில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இன்று செவ்வாய்க்கிழமையோடு தை அமாவாசை வந்துள்ளதால் கூடுதலான பக்தர்களை பார்க்க முடிந்தது.
போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் பரிசலில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலையொட்டி உள்ள காவிரி படித்துறையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
கொடுமுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையிலும் இன்று அதிகாலையிலேயே மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு இஷ்டமான பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை படைத்து தர்ப்பணம் செய்தனர்.
பிறகு அதை காவிரி ஆற்றில் விட்டனர். ஆற்றில் புனித நீராடினர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நேற்று முன்தினம் காய்கறிகள் வரத்து அதிகளவில் இருந்தது. எனவே அதன் விலையும் குறைந்து காணப்பட்டது.
மார்க்கெட்டில் கத்திரிக்காய் கிலோ ரூ.20-க்கும், தக்காளி கிலோ ரூ.10-க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.20-க்கும், மிளகாய் கிலோ ரூ.20-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.50- க்கும், பெரிய வெங்காயம் கிலோ .50-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20-க்கும், புடலங்காய் கிலோ ரூ.20-க்கும் சேனக்கிழங்கு கிலோ ரூ.30-க்கும், பாகற்காய் கிலோ ரூ.20-க்கும் விற்பனையானது. நேற்றும் இதே விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் பொங்கலையொட்டி அதிகளவில் காய்கறிகளை வாங்கி சென்றனர். ஆனால் நேற்று கேரட் விலை மட்டும் உயர்ந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ரூ.50-க்கு விற்பனையானது. நேற்று மார்க்கெட்டில் உள்ள கடைகளை பொறுத்து ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்த்தி கேரட் விற்பனை செய்யப்பட்டது.
கேரட் விலை உயர்வு குறித்து நேதாஜி மார்க் கெட்டில் ஒருவரிடம் கேட்ட போது, ஊட்டி மார்க்கெட்டுக்கு நேற்று விடுமுறை நாளாகும். எனவே அங்கிருந்து ஈரோட்டிற்கு வர வேண்டிய கேரட் விற்பனைக்கு வர வில்லை.
இதனால் மற்ற இடங்களிலிருந்து வந்த கேரட் மட்டும் விற்பனைக்கு இருந்தது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாகி விட்டது. நேற்று பொங்கலை யொட்டி மார்க்கெட்டில் அதிகளவில் மக்கள் கூட்டம் இல்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு வெறிச்சோடி தான் காணப்படும் என்றார். #tamilnews
கோபி:
கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
இதையொட்டி பாரியூர் நஞ்ச கவுண்டன்பாளையம் பிரிவில் ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர் பேனர் வைத்திருந்தனர்.
இதை பார்த்த விஜய் ரசிகர்களான அதே பகுதியை சேர்ந்த ரத்னவேல், சதீஷ், தியாகு ஆகியோர் அங்கு வந்தனர்.
அங்கு நின்ற ரஜினி ரசிகர்களான ஜெகதீகன் (வயது44),பழனிச்சாமி (46) ஆகியோரிடம் இந்த இடத்தில் எப்படி பேனர் வைக்கலாம்? என்று கேட்டனர்.
இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதல் ஏற்பட்டது. ரத்னவேல், சதீஷ், தியாகு ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தி, பிளேடால் ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனரை கிழித்தனர்.
மேலும் ஜெகதீசன், பழனிச்சாமி ஆகியோரை கத்தியால் வெட்டி தாக்கினர். கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலை மிரட்டலும் விடுத்தனர். கத்தி வெட்டில் ஜெகதீசன், பழனிச்சாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்தில் ஜெகதீசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து ரத்னவேல், சதீஷ், தியாகு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் இன்று கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ.20-க்கும், தக்காளி கிலோவுக்கு ரூ.10-க்கும், உருளை கிழங்கு கிலோவுக்கு ரூ.20-க்கும், மிளகாய் கிலோவுக்கு ரூ.20-க்கும், கேரட் கிலோவுக்கு ரூ.50-க்கும், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.50-க்கும், வெண்டக்காய் கிலோவுக்கு ரூ.20-க்கும், புடலங்காய் கிலோவுக்கு ரூ.20-க்கும் சேனக்கிழங்கு கிலோவுக்கு ரூ.30-க்கும், பாகற்காய் கிலோவுக்கு ரூ.20 க்கும் விற்பனையானது.
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு தாளவரி, ஊட்டி, மேட்டுபாளையம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வரும்.
மழை காரணமாக இந்த பகுதிகளில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.
இதனால் பொது மக்கள் பொங்கலை கொண்டாட காய்கறிகளை அதிக அளவில் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
ஆனால் பூக்களின் விலை உயர்வு அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1400-க்கும், முல்லை பூ கிலோவுக்கு ரூ.1000-க்கும், ஜாதி பூ கிலோவுக்கு ரூ.600-க்கும், காக்கட்டான் பூ கிலோவுக்கு ரூ.700-க்கும், சம்பங்கி பூ கிலோவுக்கு ரூ.120-க்கும், ரோஜா கிலோவுக்கு ரூ.120-க்கும், அரளி பூ கிலோவுக்கு ரூ.150-க்கும் விற்பனையானது. #TamilNews
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று ஒரு மினி பஸ்சில் இருந்து 45 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் இறங்கினார். மினி பஸ்சை விட்டு இறங்கிய அந்த பெண் எதிர் புறம் கடக்க சென்ற போது சேலம் சென்ற ஒரு தனியார் பஸ் எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது மோதியது.
இதில் அந்த பெண் படுகாயத்துடன் துடித்தார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.
பஸ் மோதி பலியான அந்த பெண்ணின் பெயர், ஊர் விபரம் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மாயிலம்பாடி ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 39). அரசுபோக்குவரத்து கழக கிளை பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இவர் தி.மு.க. தொழிற்சங்க உறுப்பினர் ஆவார். தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
வேலைக்கு போகாமல் இருந்த அவரை பணிக்கு வரச்சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தனர்.
இதனால் தேவராஜ் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது இதையே எண்ணி மனவருத்தத்தில் இருந்தார்.
திடீரென அவர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பில் இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் டிரைவர் திடீர் மாரடைப்பில் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கோவை திருப்பூர் மற்றும் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நெசவுத் தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 6 மாத காலமாக பட்டு நூல் விலை வரலாறு காணாத வகையில் விலை ஏறியதால் இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.
சத்தியமங்கலத்தில் கைத்தறி பட்டு நூல் ஜவுளி உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் டி.ஜி.புதூர் நால்ரோடு சதுமுகை, தொட்டம் பாளையம், புளியம்பட்டி, காங்கேயம், அந்தியூர். தவுட்டுப்பாளையம், சிறுமுகை புதூர், பவானி கொமாரபாளையம், ஒண்டிப்புதூர் உள்பட ஊர்களிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் ஜனவரி 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெசவுத் தொழில் செய்வோர், சாயம் போடுதல், பாவு வீசுதல், சேலை விற்பனை உள்பட அனைத்தும் நிறுத்தப்படும் என முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 4 மாவட்ட கைத்தறி நெசவாளர்களும் ஈடுபடுகிறார்கள். கூட்டத்தில் கைத்தறி பட்டு நூல் ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி செயலாளர் ரங்கராஜ், பொருளாளர் துரைசாமி, மற்றும் ஆனந்தக் குமார். சதுமுகை ஆறுமுகம். சண்முகம். ஆனந்த் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






