search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver kills"

    திருப்பத்தூர் அருகே மணல் லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருப்பத்தூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், அறங்தாங்கி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் மூர்த்தி (வயது 45). டிப்பர் லாரி டிரைவர்.

    இவர் புதுக்கோட்டையில் இருந்து லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் புறப்பட்டார். நெடுமரம் அருகே வந்தபோது, எதிர் பாராத விதமாக லாரி பாலத்தில் மோதியது.

    இதனால் லாரி கவிழ்ந்தது. அதன் பின் சக்கரங்கள் தனியாக கழன்றன. இந்த விபத்தில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சேலம் அருகே நள்ளிரவில் கண்டெய்னர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேலம்:

    திருப்பூரில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்றிரவு பெங்களூருக்கு புறப்பட்டது. லாரியை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையம் பிரிவு ரோடு அருகே நள்ளிரவு 12 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சென்டர் மீடியனை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்றது. அதே நேரத்தில் திருவள்ளூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இந்த லாரி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். கிளீனராக இருந்த திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த பிரித்விராஜா கால்கள் முறிந்து உயிருக்கு போராடினார். கண்டெய்னர் டிரைவரான வேலூர் மாவட்டம் புங்கைநல்லூர் பகுதியை சேர்ந்த உதயன் (26) லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி மற்றும் மகுடஞ்சாவடி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய படி கிடந்த பிரித்விராஜாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான மணிகண்டன் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கோழிகளும் இறந்தன.

    விபத்தில் சிக்கிய இரு வாகனங்களையும் அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்றிரவு அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    சேலம் மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55). தொழிலாளியான இவர் நேற்றிரவு அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கொடுங்கையூர் பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தை தொட்ட தனியார் கம்பெனி டிரைவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    பெரம்பூர்:

    கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (40). தனியார் கம்பெனி டிரைவர்.

    நேற்று இரவு கொடுங்கையூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஜெயராஜ் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தை தொட்டபடி சாலையின் அருகில் ஒதுங்கினார். அப்போது திடீர் என்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் அலறியபடியே கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே ஜெயராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். மழை பெய்த போது மின் கம்பத்தில் மின்சாரம் கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×