search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொடுங்கையூரில் மின் கம்பத்தை தொட்ட டிரைவர் பரிதாப பலி
    X

    கொடுங்கையூரில் மின் கம்பத்தை தொட்ட டிரைவர் பரிதாப பலி

    கொடுங்கையூர் பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தை தொட்ட தனியார் கம்பெனி டிரைவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    பெரம்பூர்:

    கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (40). தனியார் கம்பெனி டிரைவர்.

    நேற்று இரவு கொடுங்கையூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஜெயராஜ் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தை தொட்டபடி சாலையின் அருகில் ஒதுங்கினார். அப்போது திடீர் என்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் அலறியபடியே கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே ஜெயராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். மழை பெய்த போது மின் கம்பத்தில் மின்சாரம் கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×