என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தம்
    X

    ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தம்

    பட்டுநூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஈரோடு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மற்றும் திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் பட்டுநூல் விலையை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கையினை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என 3 மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளாதபட்சத்தில் கைத்தறி நெசவாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குறித்து உள்ளனர்.

    இன்று (புதன்கிழமை) கைத்தறி நெசவாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் கைத்தறிகள் இயங்கவில்லை. இப்பகுதிகளில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் கைத்தறி கூடங்கள் இப்போது ஓடாமல் வெறிச்சோடிபோய் கிடக்கிறது.

    “வேலைநிறுத்தப் போராட்டத்தில் கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். ஆகவே மத்திய-மாநில அரசுகள் இந்த வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் கொண்டு எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கைத்தறி நெசவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×