என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
    • ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தங்களது கோரிக்கைகளைதமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து அலுவலகத்தில் பணிபுரிந்து போராட்டம் நடத்தினர்.

    அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓவ்வூகியம் வழங்கிட வேண்டும்.பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்திடவேண்டும்.

    எல்லை விரிவாக்க பணியாளர்கள் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செயல்திறனற்ற பணியாளர்கள் ஊதிய விகிதம் 5200-20200+1900 வழங்கிட வேண்டும். பிறதுறை பணிகளை நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

    அரசாணை எண் 152, அரசாணை எண் 10ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும். நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சியில் அலுவலர்கள் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

    • சோதனையின்போது பல கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. குறிப்பாக 20 ரூபாய் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை மறைத்துவைத்து ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்து வந்தனர்.

    இதனைதொடர்ந்து ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் மாநகர் நல அலுவலர், துப்புரவு ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று பஸ்நிலையத்தில் அதிரடியாக அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின்போது பல கடைகளில் பான்பராக், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிலோ கணக்கில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தீ வைத்து அழித்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடும் கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பஸ் நிலையத்தை போலவே திண்டுக்கல் புறநகர் பகுதிகளிலும், ரெயில்நிலைய பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. எனவே அதுபோன்ற பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • தீ விபத்து ஏற்பட்டதால் குடோனில் வைக்கப்பட்டிருந்த கயிறு மற்றும் நார் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
    • கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால் இதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மல்லையாபுரத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த ஆலையில் இன்று திடீரென தீப்பிடித்தது. குடோனில் வைக்கப்பட்டிருந்த கயிறு மற்றும் நார் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருந்தபோதும் ஆலையில் இருந்த லட்சகணக்கான பொருட்கள் எரிந்து சாம்பாலானது.

    இப்பகுதியில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால் இதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாகவே அடிக்கடி தீ விபத்துகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    • சேர்வீடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது.
    • இந்த விபத்தில் ஒருவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது55).இவர் குடும்பத்தினருடன் தனது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு மீண்டும் நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    காரை அவரது மகன் சிவனேசன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது. இதில் காரில் வந்த கந்தசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் கந்தசாமியின் உடலை கைபற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் வந்த அவரது மனைவி கெஜலட்சுமி, மகன் சிவனேசன், மகள்கள் சுமதி, சித்ரா ஆகியோர் பலத்த காயங்களுடன் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி க்கபட்டுள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சேகரிக்க 7 பிக்கப் வாக னங்கள் வரவழைக்கப்ப ட்டது.
    • ஒவ்வொரு வார்டுகளிலும், தெருக்களிலும் உடனு க்குடன் குப்பைகளை அகற்றும் பணி முழுமையாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் :

    கொடைக்கானல் நகராட்சியில் தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் 15-வது மத்திய குழு நிதி திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சேகரிக்க 7 பிக்கப் வாக னங்கள் வரவழைக்கப்ப ட்டது.

    இந்த வாகனங்களின் செயல்பாட்டு பணியை நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் முத்துக்குமார்,

    நகர்நல அலுவலர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. குப்பைகளை அகற்றும் வாகனங்களின் எண்ணி க்கை அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு வார்டுகளிலும், தெருக்களிலும் உடனு க்குடன் குப்பைகளை அகற்றும் பணி முழுமையாக நடைபெறும் என நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தெரிவித்தார்.

    • தமுத்துபட்டியில் வீரா சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்து பங்களாவில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அங்கு கூடியிருந்த தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் இவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு உபயோக பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களை கவனித்து வந்தார். இதில் பல பார்கள் அனுமதியின்றியும், சில பார்கள் முறையாகவும் நடத்தி வந்துள்ளார். அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் நடத்தி பல கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் நேற்று மதியம் 2.15 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் சென்றனர். வீட்டில் சாமிநாதனின் தாயார் சரஸ்வதி (71) இருந்தார். அவர் 2 பேர் வீட்டுக்குள் நுழைவதை பார்த்து பூட்டிய வீட்டுக்குள் எவ்வாறு நுழைந்தீர்கள் என்று கேட்டார். அப்போது அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து வந்ததாகவும், மேலும் சிலர் வாசலில் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    எதற்காக வந்தீர்கள் என கேட்டதற்கு உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது சரஸ்வதி எனது மகன் மிகவும் நல்லவன். அவன் நேர்மையாக சம்பாதித்து கட்சியில் நல்ல பெயரை வைத்துள்ளான் என கூறினார்.

    வீட்டில் ஒரு அறையில் சரஸ்வதியை உட்கார வைத்து விட்டு அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். இந்த வீடு சாமிநாதனின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வீட்டில் இருந்த அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாலை 6.20 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறினர்.

    இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துபட்டியில் வீரா சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்து பங்களாவில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு பொருட்களை கைப்பற்றிச் சென்றனர்.

    நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 6 மணி வரை நடந்தது. சுமார் 18 மணி நேரம் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது அப்பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அங்கு கூடியிருந்த தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தனியார் உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது.

    சோதனை முடித்து இன்று அதிகாலை வெளியே வந்த அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு "நோ தமிழ். ஐ ஆம் ஹிந்தி" என தெரிவித்தனர். அதன் பின்னர் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்ட போதும் அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக தி.மு.க. நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விசைத்தறியில் உற்பத்தி செய்யும் துணிகளை கைத்தறி நெசவுத் துணி என கடைகளில் வைத்து விற்பனை செய்து பொது மக்களை ஏமாற்றுவதாக கைத்தறி நெசவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெசவாளர்கள் மனு அனுப்பும் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி அருகே அய்யம்பா ளையம் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டு கிடை க்கக்கூடிய வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கைத்தறி நெசவுத் தொழிலை நசுக்கும் வகையில் விசைத்தறி கூடங்கள் அமைக்கப்பட்டு துணிகள் உற்பத்தி செய்ய ப்படுகிறது.

    விசைத்தறியில் உற்பத்தி செய்யும் துணிகளை கைத்தறி நெசவுத் துணி என கடைகளில் வைத்து விற்பனை செய்து பொது மக்களை ஏமாற்றுவதாக கைத்தறி நெசவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.800 லிருந்து படிப்படியாக குறைந்து தற்போது ரூ.500க்கும் குறைவான கூலி வழங்கப்படுகிறது. நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நூல் விலை ஏற்றத்தை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கைத்தறி தொழிலாள ர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ காப்பீடு நிறுத்தப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு மீண்டும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மேலும் கைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் போல நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அமைக்க வேண்டும். மானிய விலை யில் நெசவாளர்களுக்கு தொழில்கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெசவாளர்கள் மனு அனுப்பும் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் நெசவாளர்கள் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பிரதமருக்கு கைத்தறி நெசவாளரின் வாழ்வாதாரத்தை மீட்க கோரி கோரிக்கை மனுக்களை அனுப்பினர். நெசவாளர்கள் மனு அனுப்பும் போராட்டம் நடத்தியதால் அய்யம்பா ளையம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆடி மாதத்தில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
    • அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன.

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் அய்யலூர் பகுதியில் வார ந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மட்டு மல்லாது திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு, கோழி கள் வாங்க வருகின்றனர். தற்போது கிராமங்களில் ஆடித்திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. இன்று ஆடி 18 என்பதால் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடை பெற்று வருகிறது. மேலும் வண்டிகரு ப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கிடாவெட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    7 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.10ஆயிரத்திற்கு விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. அதிகாலை 4 மணிக்கே ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர். அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன. அதன்பின்னர் கிடாவெட்டுக்கு ஆடுகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    வருங்காலங்களில் ஆடு, கோழிகளின் விலை உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • திருவிழாவில் மலைகிராம கோவில்களில் பல வண்ண விளக்கு களால் அலங்காரிக்கப்பட்டு மைக்செட்டுகள் கட்டப்பட்டுள்ளன.
    • திருவிழாவி ற்காக அமைக்கப்பட்டுள்ள மைக் செட்டுகளில் அதிக சத்தம் வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதனை சுற்றி ஏராளமான மலைகிரா மங்கள் உள்ளன. ஆடி மாதத்தில் கிராமங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது.

    கடந்த 3 வருடங்களாக கொரோனா தொற்று கார ணமாக திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பல கிராமங்களில் திருவிழா க்கள் களைகட்டி வருகிறது.

    மலைகிராம கோவில்க ளில் பல வண்ண விளக்கு களால் அலங்காரிக்கப்பட்டு மைக்செட்டுகள் கட்டப்பட்டு ள்ளன. இதையொட்டியுள்ள வனப்பகுதியில் முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திருவிழாவி ற்காக அமைக்கப்பட்டுள்ள மைக்செட்டுகளில் அதிக சத்தம் வருகிறது.

    இதனால் வனவிலங்குகள் திசைமாறி ஊருக்குள் வரும் அபாயமும் உள்ளது. மேலும் இடைவிடாது வெடிக்க ப்படும் பட்டாசுகளும் வனவிலங்களுக்கு அச்ச த்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மலைகிராமங்களில் குறைந்த அளவு ஒலிச்சத்த த்துடன் அமைதியான முறையில் திருவிழாக்கள் கொண்டாட வனத்துறை யினர் உத்தரவிடவேண்டும். பொதுமக்களும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
    • சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வெக்காளி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று காலை பூக்குழி இறங்குவதற்காக பூமேடை தயார்படுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    கோவில் பூசாரி முதலில் பூக்குழி இறங்கிய பின் பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீச்சட்டி எடுத்தபடியும், அலகு குத்திய படியும், குழந்தைகளை சுமந்தவாறும் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி பக்தர்களை பரவச ப்படுத்தியது. இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்ம ன்கோவில், அபிராமி அம்மன் கோவில், புவனே ஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

    அதிகாலை முதல் ஏராள மான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் கோட்டை குளத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.

    • பிளாஸ்டிக் இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்குவது குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தடுத்து பிளாஸ்டிக் இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்குவது குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது,

    நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை உருவா க்கிட கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் செல்லும் நுழைவுப் பகுதிகளான கொடைக்கானல் ஊராட்சி க்குட்பட்ட அடுக்கம், பூம்பாறை, மன்னவனூர், பாச்சலூர் ஊராட்சிகள், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், ஜி.தும்மலப்பட்டி ஊராட்சி காமக்காபட்டி, பழனி ஊராட்சி ஒன்றியம், சிவகிரிப்பட்டி ஊராட்சி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சி, ரெட்டியா ர்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,

    தருமத்துப்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடுப்பு சோதனை சாவடிகளில் பேருந்துகள், கார், வேன், இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வதோடு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்க ப்பட்ட தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்வதை தடுத்திட வேண்டும்.

    போக்குவரத்துத்துறை மூலம் பேருந்து நடத்துநர், ஓட்டுநருக்கு முறையாக தகவல் தெரிவித்து பேருந்தில் வரும் பயணி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை பெற்று, பிளாஸ்டிக் தடுப்பு சோதனை சாவடிகளில் கொடுக்க வேண்டும். திண்டுக்கல், வத்தலக்குண்டு, பழநி, செம்பட்டி ஆகிய பஸ் நிலையங்கள் மற்றும் கொடைக்கானல் வழித்தட ங்களில் விழிப்புணர்வு பலகைகள் நிறுவ வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக கண்ணாடி, சில்வர் பாட்டில்கள் தாரள மாக கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். பிளா ஸ்டிக் பைகள்,

    பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்க ப்பட்ட தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்திடும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து, திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே கொடைக்கானல் மலைப்பகு தி யில் பிளாஸ்டிக் பயன்படு த்துவதால் கொடைக்கானல் மலைப்பகுதியின் பசுமை பாதிக்கப்படுவது, விலங்கி னங்களின் உயிரிழப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாவட்டத்திலுள்ள அனைத்து மலைப் பகுதி களிலுள்ள கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானங்கள் விற்பனை மற்றும் பிளா ஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுத்தல், பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம் அலுவ லர்கள் ஈடுபட வேண்டும். மலைகிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தொழில்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இத்தீவிர பிளாஸ்டிக் துப்புரவு முகாம் மூலம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுத்தல், விற்பனை செய்வதை தடுத்தலோடு, பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    • கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது.
    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது.

    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் கடந்த 1 மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து சாமானிய மற்றும் ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உழவர் சந்தையிலும் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை குறைத்தும், தவிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிக அளவு தக்காளி வந்ததால் அதிரடியாக விலை குறைந்தது.

    வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு தேனி, வருஷநாடு, சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. சராசரியாக 15 டன் தக்காளி இங்கு வரத்து இருக்கும். இங்கிருந்துதான் திங்கட்கிழமை நடக்கும் பட்டிவீரன்பட்டி சந்தைக்கும் தக்காளி செல்லும். இது தவிர பல்வேறு ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

    கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது. சுமார் 12 டன் வரை தக்காளி வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஏராளமானோர் போட்டி போட்டு தக்காளியை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மலிவு விலையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூறினாலும், பெரும்பாலான கடைகளில் இது கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டிலேயே கிலோ ரூ.55க்கு தக்காளி கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு சில வியாபாரிகள் ஏற்கனவே தாங்கள் வாங்கி வைத்திருந்த தக்காளியை பழைய விலைக்கே கூடுதலாக விற்றனர். புதிதாக வந்த தக்காளியை நாளை முதல் விற்பனை செய்வதாக தெரிவித்தனர். வரத்து அதிகரிக்கும் சமயங்களில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×