என் மலர்
திண்டுக்கல்
- சிவில் நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் வக்கீல் சங்கம் சார்பாக சிவில் நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி தேர்வு எழுத உள்ள வக்கீல்களுக்கு குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் என்ற தலைப்பில் வக்கீல் செந்தில்குமார் பயிற்சி அளித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் திருச்சி சட்டக் கல்லூரி பேராசிரியர் இன்பசேகரன் பயிற்சி அளித்தார்.
திண்டுக்கல் வக்கீல் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
- ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய் கருப்பண சுவாமி கோவிலில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.இதற்கு சாணார்பட்டி ஒன்றியம் தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கினார்.இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன்,நத்தம்தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின குமார், கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன்,
வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,கணவாயப்பட்டி ஊராட்சி செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- இந்தப் பகுதியில் உள்ள கல்குவாரி,கிரஷர் மற்றும் பட்டாசு தொழிற்சா லை அனுமதியை ரத்து செய்து,தொட்டி பாலத்தை பாதுகாக்க உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் தூண்களில் விரிசல் ஏற்படுகிறது.பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
குள்ளனம்பட்டி:
அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டம் பெரும் முயற்சியின் காரணமாக திட்டம் நிறைவடைந்தது.இதனால் கேரளாவில் நல்ல மழை பெய்யும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் வந்து உசிலம்பட்டி மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இதனால் அனைத்து இடங்களிலும் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட தொட்டி பாலம் அமைத்து வைகை அணையில் 27 கி.மீ கால்வாய் அமைக்கப்பட்டு உத்தப்ப நாயக்கனூரில் 2 பகுதியாக பிரிந்து விவசாயத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இந்த தொட்டிபாலம் அருகே கல்குவாரி,கிரசர் அமைத்து வெடிவைத்து கல் எடுத்து வருகின்றனர்.அதன் அருகிலேயே பட்டாசு தொழிற்சாலை வைத்து நடத்தி வருகின்றனர்.இதனால் 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் தூண்களில் விரிசல் ஏற்படுகிறது.பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
ஆகவே இந்தப் பகுதியில் உள்ள கல்குவாரி,கிரஷர் மற்றும் பட்டாசு தொழிற்சா லை அனுமதியை ரத்து செய்து,தொட்டி பாலத்தை பாதுகாக்க உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது மாநில செயலாளர் பாஸ்கர பாண்டியன்,உசிலம்பட்டி மாவட்ட கவுன்சிலர் வக்கீல் ரெட்காசி, விவசாய அணி தலைவர் எவரெஸ்ட் பாலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இன்று காலையில் திடீரென 4 வெறிநாய்கள் சாலையில் ஆக்ரோச மாக சுற்றி திரிந்தன. இவர்கள் வீட்டில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதற தொடங்கின.
- இப்பகுதி யில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது மக்களை விரட்டி கடிக்கும் வெறிநாய்க ளால் அச்சமடைந்து ள்ளனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே டொக்கு வீரன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள். விவசாயிகளான இவர்கள் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடை களை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் பட்டி அமைத்து கட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலை யில் இன்று காலையில் திடீரென 4 வெறிநாய்கள் சாலையில் ஆக்ரோச மாக சுற்றி திரிந்தன. இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள் அலறி ஓடினர். இவர்கள் வீட்டில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதற தொடங்கின. இதில் சில ஆடுகள் காயத்துடன் தப்பிஓடி விட்டது. 2 சினைஆடுகள் வெறிநாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது.
மிகவும் சிரமமப்பட்டு விவசாய த்துடன் கால்நடைகளை வளர்த்து வந்த முருகேசன் குடும்பத்திற்கு இது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த ஆடுகளை பார்த்து கதறிஅழுதனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதி யில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது மக்களை விரட்டி கடிக்கும் வெறிநாய்க ளால் அச்சமடைந்து ள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
- இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களி லிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களி லிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
இதைப்போலவே பகவதி,காளியம்மன், தில்லைகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- இன்று ஒரு நபருக்கு 2 கிலோ தக்காளி வழங்கினார்.
- அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார்
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடந்த 1 மாதத்திற்கு மேலாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் இதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த 3 வாரங்களாக ரூ. 100 க்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து வந்த போதிலும் பல கடைகளில் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளி யானது. தக்காளி வியாபாரி யான சந்தோஷ் முத்து கடந்த வாரமும் இதேபோல் நபருக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கினார். இன்று ஒரு நபருக்கு 2 கிலோ தக்காளி வழங்கினார். இது குறித்து அறிவிப்பு வெளி யிட்டவுடன் பொதுமக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் குவியத் தொடங்கினர். திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த சந்தோஷ்முத்து காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சேவையுடன் அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார். இதனை அறிந்த பொது மக்கள் காலை 6 மணிக்கே கடையில் குவிந்தனர். வரிசையில் நின்று தக்காளியை ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
இது குறித்து தக்காளி வியாபாரி கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன்.
கடந்த வாரம் 5 டன் தக்காளி வரவழைக்கப்பட்டு ஒரு நபருக்கு 1 கிலோ தக்காளி ரூ.60க்கு வழங்கினேன். அதேபோல் இன்று 1 கிலோ ரூ.60 என்ற விலையில் 2 கிலோ வழங்கி வருகிறேன். இன்று 8 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு தக்காளி வழங்கப்படாது. பொதுமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றார். மேலும் அடுத்த வாரமும் தக்காளி விலை நிலவரத்தைப் பொறுத்து மலிவு விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.
1 கிலோ தக்காளி ரூ.60க்கு மீண்டும் விற்பனை செய்ய ப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் வந்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
- பெண்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்கள் வாழ்வின் இலக்கினை அடைய வேண்டும்.
- போட்டிகள் நிறைந்த உலகில் குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு எவ்வித காரணங்களுக்காகவும் பின்வாங்க கூடாது
நத்தம்:
நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.விழாவிற்கு என்.பி.ஆர்நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை மாணவி அனுசியாபேகம் வரவேற்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை கண்காணிப்பாளர் அருள்மதி ஐ.ஏ.எஸ் பேசுகையில்,
பெண்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்கள் வாழ்வின் இலக்கினை அடைய வேண்டும். எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் விடாமுயற்சி யுடன் இலக்கினை அடைய வேண்டும். பெண்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.
போட்டிகள் நிறைந்த உலகில் குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு எவ்வித காரணங்களுக்காகவும் பின்வாங்க கூடாது மாணவிகள் தங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பேசினார். முடிவில் நர்சிங் மாணவர் பாபிஜான் நன்றி கூறினார்.இதில் என்.பி.ஆர்.கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவிகள், பேராசியர்கள் கலந்து கொண்டனர்.
- கோம்பைகாடு பகுதியில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இங்கு சுற்றுலா வரும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவமும், காரில் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தள்ளி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அடுத்துள்ள வில்பட்டி பழைய சாராயகடை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டதால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாயமான நபர்களின் விபரங்களை சேகரித்து விசாரித்தனர். ஆனால் எந்த நபரும் மாயமாகவில்லை என தெரியவந்ததால் சுற்றுலா பயணி யாரேனும் இறந்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோம்பைகாடு பகுதியில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த 2 நபர்கள் குறித்தும் எந்த விபரமும் தெரியவில்லை.
கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக இருந்துவரும் நிலையில் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா வரும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவமும், காரில் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தள்ளி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது. பலமாதங்கள் கழித்துதான் இதுபோன்ற சம்பவங்கள் வெளியில் வரும்.
அதுபோல் ஒரேவா ரத்தில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் யார்? கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கையாக இறந்தார்களா என்று தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். இறந்தவர்கள் விபரத்தை போலீசார் உரிய விசாரணை நடத்தி கண்டறியவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு போடப்பட்ட கான்கீரிட் மூடியுடன் கூடிய வடிகால் பாலங்கள் சேதம டைந்து ள்ளது.
- தார்சாலை மற்றும் வடிகாலுக்காக போடப்படும் பாலங்களை தரமானதாக போட வேண்டும் எனவும் உடைந்த பாலங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்
சின்னாளபட்டி:
சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் சின்னாளபட்டி பிரிவிலிருந்து பூஞ்சோலை வழியாக பஸ் நிலையம் வரையில் சாலையின் இருபுறமும் மூடப்பட்ட வடிகாலுடன் சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த பணி கடந்த ஒரு மாதமாக அசுரவேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே வடிகால் அமைத்த இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள் மற்றும் போடப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு போடப்பட்ட கான்கீரிட் மூடியுடன் கூடிய வடிகால் பாலங்கள் சேதம டைந்து ள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப வடிகாலுடன் கூடிய தார் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தற்போது போட ப்படும் தார் சாலைகள் தரமற்றதாக உள்ளது. வடி காலுக்கு மேலே போட ப்பட்ட பாலங்கள் தரமில்லாமல் உள்ளதால் 4 மாதங்களில் பல இடங்களில் பாலம் உடைந்து விட்டது.
அந்த தெருகளுக்குள் இனி வாகனங்கள் எப்படி செல்லும் என்பது தெரிய வில்லை.எனவே, தார்சாலை மற்றும் வடிகாலுக்காக போடப்படும் பாலங்களை தரமானதாக போட வேண்டும் எனவும் உடைந்த பாலங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+2
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கொல்லபட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் பழமையான மகாலட்சுமி அம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் நீண்டவரிசையில் நின்றனர். அவர்களை கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். அதனைதொடர்ந்து கோவில் முன்பு அமரவைக்கப்பட்ட பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைக்கப்பட்டது.
இந்த திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இளம்பெண் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார்
- வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் சித்துவார்பட்டியை சேர்ந்த முருகன் மகள் ராஜேஸ்வரி(28). இவருக்கும் குபேந்திரராஜா என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் பெண்குழந்தை உள்ளது.
ராஜேஸ்வரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நல்லாம்பட்டி, பொன்னகரம், காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதிநகர், சமத்துவபுரம், வேடபட்டி,யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ஞானநந்தகிரிநகர், எம்.ஜி.ஆர்.நகர், மொட்டணம்பட்டி ரெயில்வேகேட், அந்தோணிநகர், மேட்டுப்பட்டி, சாமிக்கண்ணு தோட்டம்,
பாரதிநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.






