என் மலர்
திண்டுக்கல்
- நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வத்தலக்குண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங் கலந்துகொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகில் உள்ள கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.இ. -பள்ளியில் பழனி, திண்டுக்கல், ஓடடன்சத்திரம் கொடைரோடு, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வத்தலக்குண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங் கலந்துகொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.
சிறப்பு விருந்தினார்களாக திண்டுக்கல் கூடைப் பந்தாட்ட கழக தலைவர் செண்பக மூர்த்தி, துணை செயலாளர் மருதன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டியில் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கயல்விழி முன்னிலை வகித்தார். ரியா அருண், கார்த்திகா, ஆஷித்தா, ஹேமாஸ்ரீ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கிரி வீதி, அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருகின்றனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அகரித்துள்ளது. இதனால் கிரி வீதி, அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலை க்கோவிலுக்கு சென்றனர். மேலும் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர். பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை பகுதியை சேர்ந்த அம்மன் கலைக்குழு சார்பில் கும்மி, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 100-க்கும் மேற்பட்டோர் முருகப்பெருமானின் புகழ் பாடல்களுக்கு மேள இசைக்கு ஏற்ப கும்மி, ஒயிலாட்டம் ஆடினர். இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் தங்களின் செல்போனில் புகைப்படமும் எடுத்தனர்.
- மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியது.
- மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
நத்தம்:
நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம், மேலூர், சிங்கம்புணரி, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் காய்கறி கடைகள் நடத்துவதற்கு வருகின்றனர்.
இன்று காலை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டி மங்கலத்தைச் சேர்ந்த நாச்சான் மனைவி பேச்சி (வயது 60) என்பவர் வழக்கம் போல் காய்கறி கடை நடத்துவதற்காக சாலை ஓரத்தில் காய்கறி மூடைகளை அடுக்கி கடை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த இடத்தில் தாழ்வாக செல்லும் பழைய மின் வழி தடத்தை மாற்றி உயரமான அளவில் மின்கம்பம் ஊன்ற ப்பட்டது. அதில் மின் இணைப்பு கொடுக்காமல் மின் கம்பியை சுருட்டி கம்பத்தின் கீழ் தரையில் வைத்திருந்தனர். மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மின்சார வாரிய அலட்சி யத்தால் பெண் இன்றும் 3 பசுமாடுகள் இதற்கு முன்பும் உயிரி ழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
தொடர் சம்பவ ங்களால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். இதற்கு தீர்வு காண வே ண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் பேச்சியின் உடலை பிரேத பரிசோ தனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் டி.எம்.ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலையை கொண்டு வர வேண்டும்.
கொடைக்கானல்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை நடத்தியதால் நாடு முழுவதும் அதிர்வலைகள் கிளம்பியது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து டி.எம்.ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலையை கொண்டு வர வேண்டும். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் .
- குடிநீர் பைப்புகள் உடைந்து குடிதண்ணீர் சாக்கடைக்குள் செல்கிறது.
- இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு பேரூராட்சி காந்திஜி புரம் 3-வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை, சாக்கடை சேதமடைந்து உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகள் உடைந்து காணப்படுகிறது. குடிதண்ணீர் குழாய்கள் சாக்கடைக்குள் செல்கிறது.
இதனால் சாக்கடை தண்ணீர் குடிதண்ணீரில் கலந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடையை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகமான வளைவுகள் கொண்ட இந்த மலைச்சாலை யில் விபத்தை தவிர்க்க குவிலென்ஸ் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக வாழகிரி - ஊத்துப்பகுதியில் குவிலென்ஸ் கண்ணாடி சேதமடைந்துள்ளதால் பஸ், லாரி, கார், பைக்குகளில் செல்பவர்கள் அவதி யடைந்து வருகின்றனர்.
பெரும்பாறை:
வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைப்பாதையில் ஏராள மான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. அதிகமான வளைவுகள் கொண்ட இந்த மலைச்சாலை யில் விபத்தை தவிர்க்க குவிலென்ஸ் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிரே வரும் வாகனங்களை எளிதாக வாகன ஓட்டிகள் கண்டுகொள்ள முடியும்.
இந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட குவிலென்ஸ் கண்ணாடி பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக வாழகிரி - ஊத்துப்பகுதியில் குவிலென்ஸ் கண்ணாடி சேதமடைந்துள்ளதால் பஸ், லாரி, கார், பைக்குகளில் செல்பவர்கள் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் விபத்து அபாயமும் உள்ளது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.
- விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் மலை ஸ்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மேலும் ஏரிச்சாலையை சுற்றி ஏராளமானோர் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். தூண்பாறை பகுதியில் யானைகள் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வாகன ங்களால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்து.
சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக சுற்றுலா பயணிகள் வந்ததால் சிறு குறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- கூட்டத்தின்போது கள்ளிமந்தையம் பகுதியில் காய்கறி விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. எனவே விளை நிலத்தில் சிப்காட் அமைக்க கூடாது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் பேசும்போது, சிப்காட் அமைக்க பழனி முருகன் கோவில் நிலத்தை கையக ப்படுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
பழனி:
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் சிப்காட் அமைப்பது குறித்து விவசாயி களுடனா ன ஆலோசனை கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலு வலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகைதீன் தலைமை தாங்கினார். பழனி ஆர்.டி.ஓ. சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒட்ட ன்ச த்திரம், கள்ளிமந்தையம், பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது கள்ளிமந்தையம் பகுதியில் காய்கறி விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. எனவே விளை நிலத்தில் சிப்காட் அமைக்க கூடாது.
இங்கு சிப்காட் வந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசும்போது, கள்ளிமந்தையம் பகுதியில் சிப்காட் அமைக்க பெரும் எதிர்ப்பு நிலவுகிறது.
எனவே அங்கு சிப்காட் அமைக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வரும்வரை போராட்டம் நடைபெறும் என்றார். அதேபோல், பா.ஜ.க. நிர்வாகிகள் பேசும்போது, சிப்காட் அமைக்க பழனி முருகன் கோவில் நிலத்தை கையக ப்படுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
பின்னர் அதிகாரிகள் பேசும்போது, சிப்காட் அமைப்பது பற்றி விவசாயிகளிடம் விளக்க கூட்டம் தான் நடத்தி வருகிறோம்.
எனவே சிப்காட் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் மனு க்களாக மாவட்ட நிர்வா கத்திடம் அளிக்க லாம். இந்த மனுக்கள் குறித்து உயர் அதிகா ரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னநகரம், நல்லாம்பட்டி, ரெட்டி யபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசி ங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளி யப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செய ற்பொ றியாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.
- காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்தது.
- தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மலைப்பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பற்றி எரிந்த காட்டுத் தீயில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.
- 9வது தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் உள்ள வி.ஐ.பி மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கைத்தறி கண்காட்சி நடைபெறவுள்ளது.
- இந்நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
திண்டுக்கல்:
சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் தேசிய கைத்தறி தின விழா 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று நாடு முழுவதும் கொ ண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு நாளை (7ந் தேதி) 9வது தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் உள்ள வி.ஐ.பி மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கைத்தறி கண்காட்சி நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், வாழை நார் பட்டு சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப் படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோல், நாகல்நகர் பகுதியில் உள்ள செந்தா மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த வாய்ப்பை நெச வாளர்கள் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும், என மாவ ட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவி த்துள்ளார்.
- மார்க்கெட்டில் இருந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்து செல்ல முயன்றபோது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட வியாபாரிகள் நாங்கள் தரமான முறையில்தான் மீன்கள் விற்பனை செய்கிறோம்
- ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்று ஆய்வு நடத்தினால் வியாபாரம் பாதிக்கும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் எடுத்து அசைவ உணவு உண்ண பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன்கள் தரமற்ற முறையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கண் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சின்னாளபட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு 150 கிலோ கெட்டுப்போன மற்றும் பார்மலின் தடவிய மீன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வளத்துறை ஆய்வாளர்கள் ஞானசுந்தரி, பார்வதி, சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், சரவணக்குமார், ஜாபர்சாதிக் உள்ளிட்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்கப்படும் மீன்களில் பாமலின் தடவப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீன்களை ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மார்க்கெட்டில் இருந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்து செல்ல முயன்றபோது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட வியாபாரிகள் நாங்கள் தரமான முறையில்தான் மீன்கள் விற்பனை செய்கிறோம், ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்று ஆய்வு நடத்தினால் வியாபாரம் பாதிக்கும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மீன்களை கடையில் விட்டு விட்டு தரமான முறையில் மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.






