என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடத்திய மகளிர் அமைப்பினர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கொடைக்கானலில் மகளிர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் டி.எம்.ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலையை கொண்டு வர வேண்டும்.
கொடைக்கானல்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை நடத்தியதால் நாடு முழுவதும் அதிர்வலைகள் கிளம்பியது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து டி.எம்.ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலையை கொண்டு வர வேண்டும். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் .
Next Story






