என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாய் அருகே உள்ள சேதமடைந்த சாக்கடை
பண்ைணக்காடு பேரூராட்சியில் குடிநீரில் கலக்கும் சாக்கடையால் தொற்று நோய் பரவும் அபாயம்
- குடிநீர் பைப்புகள் உடைந்து குடிதண்ணீர் சாக்கடைக்குள் செல்கிறது.
- இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு பேரூராட்சி காந்திஜி புரம் 3-வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை, சாக்கடை சேதமடைந்து உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகள் உடைந்து காணப்படுகிறது. குடிதண்ணீர் குழாய்கள் சாக்கடைக்குள் செல்கிறது.
இதனால் சாக்கடை தண்ணீர் குடிதண்ணீரில் கலந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடையை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






