என் மலர்
நீங்கள் தேடியது "மீன் மார்க்கெட்டில் ஆய்வு"
- மார்க்கெட்டில் இருந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்து செல்ல முயன்றபோது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட வியாபாரிகள் நாங்கள் தரமான முறையில்தான் மீன்கள் விற்பனை செய்கிறோம்
- ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்று ஆய்வு நடத்தினால் வியாபாரம் பாதிக்கும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் எடுத்து அசைவ உணவு உண்ண பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன்கள் தரமற்ற முறையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கண் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சின்னாளபட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு 150 கிலோ கெட்டுப்போன மற்றும் பார்மலின் தடவிய மீன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வளத்துறை ஆய்வாளர்கள் ஞானசுந்தரி, பார்வதி, சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், சரவணக்குமார், ஜாபர்சாதிக் உள்ளிட்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்கப்படும் மீன்களில் பாமலின் தடவப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீன்களை ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மார்க்கெட்டில் இருந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்து செல்ல முயன்றபோது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட வியாபாரிகள் நாங்கள் தரமான முறையில்தான் மீன்கள் விற்பனை செய்கிறோம், ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்று ஆய்வு நடத்தினால் வியாபாரம் பாதிக்கும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மீன்களை கடையில் விட்டு விட்டு தரமான முறையில் மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.






