என் மலர்
திண்டுக்கல்
- அவருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தனது நண்பரின் தாயாராருக்கு அருளா னந்தபாபு துணை யாக இருந்து வந்துள்ளார்.
- உயிருக்கு பயந்து அவர் தப்பிஓட முயன்ற போதும் ஓட, ஓட விரட்டி வெட்டியதில் அருளானந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஆரோக்கி யசாமி மகன் அருளானந்தபாபு(29). இவர் அதேபகுதியில் முருகே ஸ்வரி என்பவருக்கு சொந்த மான கடலைமிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். முருகேஸ்வரியின் மகன்களான தட்சிணா மூர்த்தி, சக்திவேல் ஆகி யோருக்கு அருளானந்தபாபு நெருங்கிய நண்பராக இருந்து வந்தார்.
இதில் தட்சிணாமூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டிலும், சக்திவேல் 2018-ம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வழக்கில் வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கள் அறிவித்திருந்தனர். இந்த வழக்கில் முருகேஸ்வரி முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். அவருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தனது நண்பரின் தாயாரான முருகேஸ்வரிக்கு அருளா னந்தபாபு துணை யாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திண்டு க்கல்-வத்தலக்குண்டு சாலையில் குடைபாறை ப்பட்டி கன்னிமாநகர் பகுதியில் அருளானந்தபாபு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்ப ட்டார். உயிருக்கு பயந்து அவர் தப்பிஓட முயன்ற போதும் ஓட, ஓட விரட்டி வெட்டியதில் அருளானந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், ஏற்கனவே தட்சிணாமூர்த்தி, சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்தான் அருளானந்தபாபுவையும் வெட்டி கொன்றிருக்க வேண்டும். எனவே கொலை யாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவங்களால் நகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- பொன்காளியம்மன் கோவி ல் அருகே சந்தேகப்படும்படி 8 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது.
- போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்கள் இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 8 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
பழனி:
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதைய டுத்து குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையி லான போலீசார் பழனி பாண்டியன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். பொன்காளியம்மன் கோவி ல் அருகே சந்தேகப்படும்படி 8 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது.
அதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்கள் இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 8 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்க ள் பழனி சிவகிரிப்பட்டியை சேர்ந்த முத்து (வயது 26), தனுஷ்குமார் (19), ஆயக்கு டியை சேர்ந்த அர்ஜூன்கு மார் (19), கண்ணன்குமார் (28), ராம்குமார் (20), மதுரை மாவட்டம் கீழமுத்துப்ப ட்டியை சேர்ந்த சரவணன் (23), பிரேம்நாத் (22) மற்றும் பழங்காநத்தத்தை சேர்ந்த சரவணன் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் பழனி பகுதியில் கொள்ளை சதியை அரங்கேற்ற இருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதில் முத்து மீது அடிதடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரசின் நலத்திட்டம் வழங்குவதற்கு எந்தவித முகாம்கள் அமைக்க வில்லை. சாலைவசதி இல்லாத மலைகிரா மங்களில் வசித்து வருகிறோம்.
- இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார்கார்டு, டிஜிட்டல் ரேசன்கார்டு ஆகியவை வழங்கப்பட வில்லை மற்றும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பற்றி என்ன வென்றே தெரியாதநிலை யில் உள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் நீதிபதிகார்த்திக் தலைமை யில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை கேட்டு நீதிபதி மற்றும் முகாம் அமைப்பா ளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் விவசாய கூலிவேலை மற்றும் கிடைக்கும் வேலை களை செய்து வருகின்றனர். கீழானவயலை அடுத்து அமைந்துள்ள மஞ்சம்பட்டி, நாட்டாம்பட்டி, மூங்கில்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் நடத்திய நீதிபதி மற்றும் வக்கீல்கள் குழுவினரிடம் தங்கள் குறைகளை கொட்டி தீர்த்தனர். இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஒரு சதவீதம் கூட கிடைக்க வில்லை.
ஓட்டு கேட்க ஊருக்கு வந்த தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களை எட்டிபார்க்க வில்லை. தற்போது இப்பகுதியின் ஊராட்சி தலைவர் யார், எம்.எல்.ஏ, எம்.பி யார் என்றுகூட எங்களுக்கு தெரியாது. ஓட்டு போடும் எந்திரமாக எங்களை நினைத்து அனை வரும் மறந்துவிட்டனர். அரசின் நலத்திட்டம் வழங்குவதற்கு எந்தவித முகாம்கள் அமைக்க வில்லை. சாலைவசதி இல்லாத மலைகிரா மங்க ளில் வசித்து வருகிறோம்.
ஆரம்பகல்வி, சுகாதார நிலையம், மின்சாரவசதி, ரேசன்கடை ஆகியவைகூட எங்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார்கார்டு, டிஜிட்டல் ரேசன்கார்டு ஆகியவை வழங்கப்பட வில்லை. பிறப்பு-இறப்பு சான்றிதழ் பற்றி என்ன வென்றே தெரியாதநிலை யில் உள்ளனர்.
பல கி.மீ தூரம் வனப்பகுதியில் நடந்து சென்று மருத்துவ சிகிச்சை செய்து வருகிறோம். இதில் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிட்டனர். அரசு அதிகாரிகளை தங்கள் பகுதியில் பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. இந்த கிராமங்கள் அரசின் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகமே எங்களுக்கு உள்ளது. கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்த கிராமங்களாக இருந்தாலும் இப்பகுதி உடுமலைப்பே ட்டைக்கு அருகில் உள்ளது. இதனால் பல சமயங்களில் எங்களது தாலுகா எது வென்றே தெரிவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு உடுமலைபேட்டை வழியாக இப்பகுதியை இணைக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் அதன்பிறகு கண்டுகொள்ளவில்லை.
மஞ்சம்பட்டி கிராமத்தில் மட்டும் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதேபோல 4 கிராமத்திலும் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சட்டவிழி ப்புணர்வு தேவையில்லை என்றும், அடிப்படை வசதிகள்தான் முதற்கட்ட தேவை என்பதும் ஏற்பட்டாளர்கள் தெரிந்து கொண்டனர். இதுகுறித்து நீதிபதி கார்த்திக் தெரிவிக்கையில்,
கொடைக்கானல் மலைகிராமங்களான மூங்கில்பள்ளம், மஞ்சம்பட்டி, நாட்டாம்பட்டி கிராமங்களில் பலருக்கு ஆதார், ரேசன்அட்டைகள் கூட இல்லை. எனவே இங்கு வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ரேசன் பொருட்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொடுக்க வேண்டும். குடிநீர், சுகாதார வசதி, ஆரம்பகல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குடியுரிமையை உறுதி படுத்தும் வகையில் அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வனவிலங்குகளுக்கு நடுவே தங்கியுள்ள அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்காலத்தில் வாழ்ந்துவருவது போன்ற நிலையில் உள்ள அவர்களை நவீன உலகத்திற்கு அழைத்துவரவேண்டும் என்றார்.
- ரெட்டியார்சத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை மேற்கொண்டதில் பல்வேறு குறைபாடுகளும், அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டது கண்டறிய ப்பட்டது.
- தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலாளர் மீது தக்க நடவடிக்ைக எடுக்குமாறு ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்திருந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி நிதியில் 1.4.2020 முதல் 30.10.2021 வரை கணக்குகளை ரெட்டியார்சத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை மேற்கொண்டதில் பல்வேறு குறைபாடுகளும், அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டது கண்டறிய ப்பட்டது.
இதுகுறித்து தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலாளர் மீது தக்க நடவடிக்ைக எடுக்குமாறு ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஊராட்சி நிதியில் கடும் குறைபாடுகள் மற்றும் நிதியிழப்புகள் கண்டறியப்பட்ட காரணத்தால் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார த்தின்கீழ் தருமத்துப்பட்டி ஊராட்சியில் அனைத்து கணக்கும் பி.எப்.எம்.எஸ்.களில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரெட்டி யார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், 2-ம் நபர் கையெழுத்திடும் அதிகாரத்தை தருமத்து ப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் தற்காலிகமாக மாற்றம் செய்து ஆணையிட ப்பட்டது. இதற்கான உத்தரவை கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.
- பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளநிலை பட்டப்படிபுக ளுக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற உள்ளது.
- பங்கேற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்பு, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சின்னாளபட்டி:
காந்தி கிராம பல்கலை க்கழகத்தில் 2023-24ம் கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.
பல்வேறு கால கட்டங்க ளில் நடத்த இதற்கான கலந்தாய்வு பட்டியலிட ப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், இளநிலை பட்டப்படிபுக ளுக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதுநிலை படிப்பு களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ந் தேதிகளில் நடக்க உள்ளது.
பங்கேற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்பு, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைப்பு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நகர்பகுதி யில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மேல்மலை கிராமமான பூண்டியில் தங்கியிருந்தனர்.
- நீர்தேக்கத்தில் அவர்கள் சுற்றிபார்த்து கொண்டிருந்த போது தவறிவிழுந்த தனுஷ் நீரில் மூழ்கினார்.
கொடைக்கானல்:
சென்னை வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(25). இவர் சென்னை யில் தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நகர்பகுதி யில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மேல்மலை கிராமமான பூண்டியில் தங்கியிருந்தனர்.
அங்கிருந்து கூக்கால் நீர்த்தேக்கம் செல்ல முடிவு செய்தனர். நீர்தேக்கத்தில் அவர்கள் சுற்றிபார்த்து கொண்டிருந்த போது தவறிவிழுந்த தனுஷ் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் கொடுத்த தக வலின்பேரில் கொடைக்கா னல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீர்தேக்கத்தில் பெரும்பகுதி சேறும் சகதியுமாக உள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும் படகு மூலம் தீயணைப்பு த்துறையினர் நேற்று 2-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இன்று 3-ம் நாளாக தனுஷ் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுடன் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களும் களம் இறங்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் சகதி நிறைந்த தண்ணீரிலும் நீச்சல் அடித்து செல்லும் தன்மை கொண்டவர்கள்.
தனுசின் தந்தை சென்னை மற்றும் சேலத்தில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் தனுஷ் என்ற மகன் மட்டும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் தனுசுக்கு பெண்பார்த்து வந்துள்ள னர். இந்நிலையில் நண்பர்க ளுடன் சுற்றுலா வந்த தனுஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நெசவாளர்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- இன்றைய விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கைத்தறித்துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் வி.ஐ.பி. மஹாலில் அமைப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று திறந்து வைத்து, நெசவாளர்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் கலெ க்டர் தெரிவித்ததாவது:-
கைத்தறி நெசவாள ர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு சார்பில் தொழில் கடனுதவிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2015-ம் ஆண்டு முதல் சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு 9வது தேசிய கைத்தறி தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், வாழை நார் பட்டு சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்த ப்பட்டு ள்ளன.
தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக திண்டுக்கல் வி.ஐ.பி மஹாலில் சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும் நாகல்நகர் பகுதியில் உள்ள செந்தா மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகியவை நடத்தப்படுகிறது.
இன்றைய விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மருத்துவ அட்டைகள், கைத்தறி ஆதரவுத் திட்டத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்க 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்கள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நெசவாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 13 நபர்களுக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான கடன் தொகைகள் உள்பட மொத்தம் ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நெசவாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- பழனி கோட்டத்துக்கு உட்பட்ட மொல்லம்பட்டியில் இருந்து வேலம்பட்டி வரை 13.5 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறமும் தேவையான நிலங்கள் குறித்து அளவீடு எடுக்கப்பட்டது.
- தற்போது சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வேராடு அகற்றப்பட்டு வருகின்றன.
பழனி:
பழனி ஆன்மீகம் மட்டுமின்றி புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகவும் திகழ்கிறது. இதனால் பழனிக்கு வந்து செல்ல வசதியாக மத்திய அரசு சார்பில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, கோவை சாலைகளை இணைத்து 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பழனியில் இருந்தும் திருப்பூர், தாராபுரத்தில் இருந்தும் பழனிக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். தற்போது இரு வழிச்சாலையாக இருக்கும் பழனி - தாராபுரம் இடையிலான 35 கி.மீ சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் ரூ.106 கோடி மதிப்பில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பழனி - தாராபுரம் வரை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி யுள்ளது. அதில் பழனி கோட்டத்துக்கு உட்பட்ட மொல்லம்பட்டியில் இருந்து வேலம்பட்டி வரை 13.5 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறமும் தேவையான நிலங்கள் குறித்து அளவீடு எடுக்கப்பட்டது.
தற்போது சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வேராடு அகற்றப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்காக 7 மீட்டர் அகலமுள்ள சாலையை 14 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.
- நீர் தேக்கத்தில் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனுஷ் தவறி விழுந்தார்.
- நீர் தேக்கம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
கொடைக்கானல்:
சென்னை வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 25). கேரளாவைச் சேர்ந்த இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சென்னை வடபழனி சாலிகிராமம் காவேரி தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சந்துரு (18). நண்பர்களான இவர்கள் மேலும் சிலருடன் கடந்த 1-ந் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு மேல்நிலை கிராமமான பூண்டி கிராமத்தில் தங்கி இருந்தனர். பின்னர் அங்கிருந்து கூக்கால் நீர் தேக்கம் பகுதிக்கு சென்றனர். தடை செய்யப்பட்ட இப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீர் தேக்கத்தில் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனுஷ் தவறி விழுந்தார்.
உடனே அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்கள் முடியாமல் போகவே கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கொடைக்கானல் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தனுசை தேடும் முயற்சியில் இறங்கினர். பின்னர் இரவு நேரமாகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
இன்று 2-ம் நாளாக மீண்டும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் தேக்கம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து சமூக ஊடகங்களிலும் பிரசாரம் செய்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றனர்.
இதற்காக தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் போதையில் அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க செல்லும்போது விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே போலீசார் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கவும், போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தட்பவெப்பநிலை மாற்றத்தால் தக்காளி செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்தது.
- கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 1 கிலோ தக்காளி அதிக பட்சமாக கிலோ ரூ.120க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம், சாலைப்புதூர், அம்பிளிக்கை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. தட்பவெப்பநிலை மாற்றத்தால் தக்காளி செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்தது.
இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து 4-ல் ஒரு பங்காக குறைந்தது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 1 கிலோ தக்காளி அதிக பட்சமாக கிலோ ரூ.120க்கு விற்பனையானது. கடந்த வாரம் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1500க்கு விற்பனையானது.
இந்நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- 3-வது வின்ச் பாதையில் அதிக வசதிகளுடன் அதிக நபர்களை ஏற்றிச் செல்லும் புதிய பெட்டிகள் பொருத்த ப்பட்டுள்ளன.
- புதிய பெட்டிகள் பொருத்தும் போது பழைய சாப்ட்டுக்கு பதிலாக பல் சக்கரத்துடன் கூடிய புதிய சாப்ட் சென்னையில் இருந்து வரவழைக்க ப்பட்டது.
பழனி:
பழனியில் மலைக் கோவில் சென்று வர படிப்பாதை, யானைப்பாதை உள்ளது. இது தவிர ரோப்கார், வின்ச் சேவைகளும் உள்ளன. தற்போது 3 வின்ச் பாதைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3 வின்ச்களும் செய ல்பாட்டில் உள்ளது. 3-வது வின்ச் பாதையில் அதிக வசதிகளுடன் அதிக நபர்களை ஏற்றிச் செல்லும் புதிய பெட்டிகள் பொருத்த ப்பட்டுள்ளன.
புதிய வின்ச் பெட்டிகளுக்கு தகுந்த நடைமேடை அமைக்க ப்பட்டுள்ளது. 3-வது புதிய பெட்டிகளை இயக்க பணிகள் நடந்து வருகிறது.
3-வது வின்ச் செயல்படுத்தும் எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த பழைய சாப்ட் பழுதடையும் நிலையில் இருந்தது. இதனால் புதிய பெட்டிகள் பொருத்தும் போது பழைய சாப்ட்டுக்கு பதிலாக பல் சக்கரத்துடன் கூடிய புதிய சாப்ட் சென்னையில் இருந்து வரவழைக்க ப்பட்டது. புதிய சாப்ட் பொருத்தப்பட்ட பிறகு விரைவில் பணிகள் நிறைவு பெற்று 3-வது வின்ச் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது.
- பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
அவர்களுடன் மாணவ-மாணவிகள் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய பொம்மன், பெள்ளி தம்பதியினர், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர். தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டனான எம்.எஸ்.டோனி விரைவில் முகாமுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






