என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 வழிச்சாலை அமைக்கும் பணி"

    • பழனி கோட்டத்துக்கு உட்பட்ட மொல்லம்பட்டியில் இருந்து வேலம்பட்டி வரை 13.5 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறமும் தேவையான நிலங்கள் குறித்து அளவீடு எடுக்கப்பட்டது.
    • தற்போது சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வேராடு அகற்றப்பட்டு வருகின்றன.

    பழனி:

    பழனி ஆன்மீகம் மட்டுமின்றி புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகவும் திகழ்கிறது. இதனால் பழனிக்கு வந்து செல்ல வசதியாக மத்திய அரசு சார்பில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, கோவை சாலைகளை இணைத்து 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பழனியில் இருந்தும் திருப்பூர், தாராபுரத்தில் இருந்தும் பழனிக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். தற்போது இரு வழிச்சாலையாக இருக்கும் பழனி - தாராபுரம் இடையிலான 35 கி.மீ சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில் ரூ.106 கோடி மதிப்பில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பழனி - தாராபுரம் வரை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி யுள்ளது. அதில் பழனி கோட்டத்துக்கு உட்பட்ட மொல்லம்பட்டியில் இருந்து வேலம்பட்டி வரை 13.5 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறமும் தேவையான நிலங்கள் குறித்து அளவீடு எடுக்கப்பட்டது.

    தற்போது சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வேராடு அகற்றப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்காக 7 மீட்டர் அகலமுள்ள சாலையை 14 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    ×