என் மலர்
திண்டுக்கல்
- சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
- ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்ற னர்.
மேலும் அலுவலகம் செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் வத்தலக்குண்டு பகுதிக்கும் குறைவான அரசு பஸ் சேவையே உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் ஆட்டோவிற்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை போக்கு வரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பஸ் சேவை பாதிக்கப்பட்ட தாக அவர்கள் தெரி வித்தனர்.
தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காலை நேரத்தில் அரசு பஸ்களை நம்ப முடியவில்லை. இதனால் தனியார் பஸ் மற்றும் ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கருதி போதிய அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பழனி தபால் அலுவலகம் சார்பில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- தபால் அலுவலக பணியாளர்கள் தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
பழனி:
பழனி தபால் அலுவலகம் சார்பில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம்' என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளார். அதனைதொடர்ந்து பழனி தபால் அலுவலகம் சார்பில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதற்கு உப கோட்ட துணை கண்காணிப்பாளர் செண்பகராஜ் தலைமை தாங்கினார். தபால் அலுவலர் காந்திமதி, வணிக பிரிவு அலுவலர் கனிஷ்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின் போது தபால் அலுவலக பணியாளர்கள் தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
ஊர்வலமானது புது தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, ஆர்.எப். ரோடு, கான்வென்ட் ரோடு வழியே மீண்டும் தபால் அலுவலகம் வந்து நிறைவடைந்தது.
- மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கி குளம் போல் நிற்கிறது.
- நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள தால் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோட்டை குளம் சாலையில் அமைந்துள்ளது மேற்கு வட்டாட்சியர் அலுவலகம். இங்கு கோட்ட கலால் அலுவலகம், உணவு பாதுகாப்பு அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் அலுவலகம், முத்திரைத்தாள் திருத்தல் கட்டண தனி வட்டாட்சியர், உதவி சார் கருவூலம், நில அளவை பிரிவு, இ-சேவை, ஆதார் சேவை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என 250 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இங்கு நாள்தோறும் பட்டா மாறுதல், வாக்காளர் அட்டை புதுப்பித்தல், புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கி குளம் போல் நிற்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவ தால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூக்கை பொத்திக் கொண்டு பணி செய்யும் நிலை ஏற்பட்டு ள்ளது.
கொசுக்கள் உற்பத்தி மையமாகவும் மற்றும் விஷ ஜந்துக்கள் உறைவிடமாகவும் வட்டாட்சியர் அலுவலகம் மாறியுள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆதார் மற்றும் இ சேவை மையங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் வந்து செல்கி ன்றனர்.
துர்நாற்றத்தில் பொதுமக்கள் கடந்து செல்லும் அவலம் உள்ளதா கவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள தால் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முறையான கழிப்பறை வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சாரலாக தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
- இதன் காரணமாக பிரதான சாலைகள் முழுவதிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொடைக்கானல் :
கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயி லின் தாக்கம் அதிகரித்து வந்தது. மலைப்பகுதியில் மழை இல்லாததால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
மேலும் வனப்பகுதியிலும் வறட்சி நிலவியதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வந்தன. இதனால் அருவி பகுதிகளில் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் முகாமிட்டது. மேலும் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் அவ்வப்போது பகல், இரவு நேரங்களில் சாரல் மழை பெய்தது . நேற்று காலை முதல் நகர் பகுதிகளான நாயுடுபுரம் , ஏரிச்சாலை , அண்ணா சாலை , செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவி வந்தது. மாலை வேளையில் சாரலாக தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக பிர தான சாலைகள் முழுவதி லும் தண்ணீர் பெருக்கெடு த்து ஓடியது . திடீரென வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
- தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.
கொடைக்கானல்:
சென்னையை சேர்ந்தவர் துரைராஜ் மகன் தனுஷ். இவரது நண்பர் சந்துரு. இவர்கள் 2 பேரும் கொடைக்கானல் மேல்மலை பூண்டிக்கு சுற்றுலா வந்தனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றபோது தனுஷ் அடித்து செல்லப்பட்டார்.
அவரை காப்பாற்ற முடியாததால் சந்துரு கொடைக்கானல் மற்றும் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் கொடுத்தார். கடந்த 2 நாட்களாக படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தனுஷ் பிணமாக மீட்கப்பட்டார். பூண்டி ஏரியில் ஆழமான பகுதியில் சென்றபோது சேற்றில் சிக்கி அவர் பலியாகி இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்மலை கிராமங்களில் அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போதை காளான் மோகத்தில் வாலிபர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வாலிபர் போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. போதை வஸ்துக்கள் தேடி இளைஞர்கள் உடல் நலம் மற்றும் உயிரை இழப்பது தொடர் கதையாகி வருகிறது.
எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் போதை காளான், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- செல்போனை திருடிக் கொண்டு தம்பதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
- கணவன்-மனைவி 2 பேரையும். கைது செய்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நத்தம்:
செந்துறை அருகே மணக்காட்டூரைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 35). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 பேர் ஜோசியம் பார்ப்பதாக கூறி உள்ளே வந்துள்ளனர்.
அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சிறிது நேரத்தில் தண்ணீர் கேட்டுள்ளனர். பூங்கொடி தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற போது ரூ.10000 மதிப்புள்ள செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்த பூங்கொடி சத்தம் போட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூறினர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்து நத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பிடிபட்டவர்கள் எரியோடு அருகே கோவிலூரைச் சேர்ந்த தங்கவேல், நித்யா என்பதும், இருவரும் கணவன்-மனைவி என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர்சங்கர் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறிவிருந்து நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய கிடாய்கள் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொன்னர்சங்கர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் முன்பு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட படையல் கறி விருந்து விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் புதுப்பட்டி, புதூர், நடுவனூர், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கிடாய் வெட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- தொழிலாளர்களின் பணம் ரூ.10ஆயிரம் கோடியை அரசு செலவு செய்துள்ளது.
- சென்னையில் மட்டும் 900 பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.
பழனி:
சி.ஐ.டி.யூ மாநில தலைவர் சவுந்தரராஜன் பழனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பஞ்சப்படியை 93 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர். தொழிலாளர்களின் பணம் ரூ.10ஆயிரம் கோடியை அரசு செலவு செய்துள்ளது. அடுத்த ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு போகும்முன் இந்த பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும்.
தமிழகத்தில் 15 ஆயிரம் காலிபணியிடங்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ளன. அதை நிரப்ப அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் மட்டும் 900 பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.
பராமரிப்பு பணிக்கு பணியாளர்களே இல்லை. இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. ஒப்பந்தமுறையில் தொழிலாளர்களை பணி அமர்த்துவதை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் 2500 பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்து 15 ஆண்டுகளை கடந்துள்ளன. சட்டப்படி அந்த பஸ்களை இயக்க கூடாது. போக்குவரத்து தொழில் சரியாக நடக்க வில்லை என்றால் தமிழகத்தில் பொருளாதாரமே பாதிக்கும். எனவே தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும்.
ஓய்வுபெற்ற பணியாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். விரைவில் அதனை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு ள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் நடுவர் நீதிமன்றம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உருவாக்க ப்பட்டது. நிலக்கோட்டை தாலுகாவில் 40 ஊராட்சி கள், 5 பேரூராட்சிகள் உள்ளது. இதில் ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து நிலக்கோட்டை வரை சுமார் 30 கி.மீ பயணிக்க வேண்டும்.
மேலும் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக வழக்குகள் திண்டுக்கல் சார்பு நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உள்ளது. இதனால் அங்கு பயணிக்க சுமார் 60 கி.மீ செல்ல வேண்டும். எனவே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிரு ந்தே நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதற்காக திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர் பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு ள்ளது. இதனால் பொது மக்கள் நீண்டதூரம் பயணி க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை தாலுகா அலுவலக பழைய கட்டிட த்தில் சார்பு நீதிமன்றம் தற்காலிகமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+2
- ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
- முருகனின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி:
ஆடி மாதம் வரும் கார்த்திகை நாள் ஆடிக்கிருத்திகை என அழைக்கப்படுகிறது. தட்சிணியான காலத்தில் முதல் மாதமான ஆடி மாதத்தில்தான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் கிளம்பி அதில் இருந்து ஆறுமுகம் தோன்றி அதனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததாக ஐதீகம் உள்ளது.
அந்த 6 கார்த்திகை பெண்கள் வானில் நிரந்தர நட்சத்திரமாக மாறினர். இதனால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. இந்த பண்டிகையை குறிக்கும் வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
முருகனின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தியும், மலர் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிகரிப்பின் காரணமாக சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு காத்திருந்தனர். மலைக்கோவில், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
இதே போல் திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி பாலசுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள பாதாள செம்பு முருகன் கோவில், அபிராமிஅம்மன் கோவிலில் உள்ள பாலசுப்பிரமணியர் சன்னதி, ஆர்.வி.நகர் கந்தக்கோட்டம் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில். திண்டுக்கல், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 பேர் படித்து வருகின்றனர்.
- இந்நிலையில் பள்ளியின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக கூறி இன்று பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அடுத்த காந்திகிராமம் பல்கலைகழக வளாகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. திண்டுக்கல், வத்தலகுண்டு பட்டிவீர ன்பட்டி அய்யம்பாளையம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 பேர் படித்து வருகின்றனர். பள்ளி முதல்வராக டாக்டர் முருகேஸ்வரன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளியின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக கூறி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பள்ளியின் நிர்வாக குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய அரசு தலையிட கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தர விட்டார்.
- மேலும் அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (வயது 50).இவர் திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் ஊழியராக உள்ளார்.சம்பவத்தன்று காலை தனது மோட்டார் சைக்கிளை டீக்கடை அருகே நிறுத்திவிட்டு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தர விட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வை யில்,நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் சித்திக்,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிரு ஷ்ணன்,முகம்மது அலி,விசுவாசம், சக்திவேல் மற்றும் சி.சி.டிவி தலைமை காவலர்கள் ஜான் சுரேஷ்குமார்,செல்வி ஆகியோர் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.மேலும் அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பாலசுப்ர மணியன் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் எடுத்துச் செல்வது போலீ சாருக்கு தெரியவந்தது.அந்த காட்சியில் பதிவான வாலிபரின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அதில் அவர் பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த தங்கபாண்டி (27)என்பது தெரியவந்தது.இதையடுத்து தங்கபா ண்டியை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கி ளும் பறிமுதல் செய்யப்ப ட்டது.கைது செய்யப்பட்ட தங்கப்பாண்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.






