செந்துறை அருகே செல்போன் திருடிய தம்பதி கைது

செல்போனை திருடிக் கொண்டு தம்பதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.கணவன்-மனைவி 2 பேரையும். கைது செய்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நத்தம்:

செந்துறை அருகே மணக்காட்டூரைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 35). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 பேர் ஜோசியம் பார்ப்பதாக கூறி உள்ளே வந்துள்ளனர்.

அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சிறிது நேரத்தில் தண்ணீர் கேட்டுள்ளனர். பூங்கொடி தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற போது ரூ.10000 மதிப்புள்ள செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்த பூங்கொடி சத்தம் போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூறினர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்து நத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் பிடிபட்டவர்கள் எரியோடு அருகே கோவிலூரைச் சேர்ந்த தங்கவேல், நித்யா என்பதும், இருவரும் கணவன்-மனைவி என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com