search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் போதை பொருட்களுக்காக உயிரிழக்கும் வாலிபர்கள்
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் போதை பொருட்களுக்காக உயிரிழக்கும் வாலிபர்கள்

    • தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    சென்னையை சேர்ந்தவர் துரைராஜ் மகன் தனுஷ். இவரது நண்பர் சந்துரு. இவர்கள் 2 பேரும் கொடைக்கானல் மேல்மலை பூண்டிக்கு சுற்றுலா வந்தனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றபோது தனுஷ் அடித்து செல்லப்பட்டார்.

    அவரை காப்பாற்ற முடியாததால் சந்துரு கொடைக்கானல் மற்றும் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் கொடுத்தார். கடந்த 2 நாட்களாக படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தனுஷ் பிணமாக மீட்கப்பட்டார். பூண்டி ஏரியில் ஆழமான பகுதியில் சென்றபோது சேற்றில் சிக்கி அவர் பலியாகி இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்மலை கிராமங்களில் அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    போதை காளான் மோகத்தில் வாலிபர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வாலிபர் போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. போதை வஸ்துக்கள் தேடி இளைஞர்கள் உடல் நலம் மற்றும் உயிரை இழப்பது தொடர் கதையாகி வருகிறது.

    எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் போதை காளான், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×