என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற பழனியில் தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்.

    இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற பழனியில் தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

    • பழனி தபால் அலுவலகம் சார்பில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • தபால் அலுவலக பணியாளர்கள் தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    பழனி:

    பழனி தபால் அலுவலகம் சார்பில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம்' என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளார். அதனைதொடர்ந்து பழனி தபால் அலுவலகம் சார்பில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இதற்கு உப கோட்ட துணை கண்காணிப்பாளர் செண்பகராஜ் தலைமை தாங்கினார். தபால் அலுவலர் காந்திமதி, வணிக பிரிவு அலுவலர் கனிஷ்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின் போது தபால் அலுவலக பணியாளர்கள் தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    ஊர்வலமானது புது தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, ஆர்.எப். ரோடு, கான்வென்ட் ரோடு வழியே மீண்டும் தபால் அலுவலகம் வந்து நிறைவடைந்தது.

    Next Story
    ×