என் மலர்
திண்டுக்கல்
- பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- அ.தி.மு.க மதுரை மாநாடு அரசியல் திருப்பு முனையாக அமையும் என முன்னாள் அமைச்சர் பேசினார்.
பழனி:
பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவி மனோகரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்துகொள்ள தயாராக உள்ளனர். இதற்காக அந்தந்த சட்டமன்ற தொகுதி அளவில் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட் வருகிறது. அதன்படி தற்போது பழனியில் ஆலோசனை செய்யப்பட்டது. மதுரையில் நடக்கும் மாநாட்டில் குறைந்தது 25 லட்சம் பேர் திரளாக கலந்துகொள்வார்கள்.
எனவே இந்த மாநாடு அரசியல் திருப்புமுனை மாநாடாக அமையும். மேலும் வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதும் உறுதி. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம். ஓ.பன்னீர்செல்வம் முடிந்துபோன சகாப்தம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- இதில் ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை,:
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செய லாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மாவட்ட அவை தலைவர் காமாட்சி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன் , சவுந்திர பாண்டியன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆங்காங்கே பூத்கமிட்டி மற்றும் பல்வேறு அதற்கான செயலில் ஈடுபட வேண்டும் என்று ஆலோ சனை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் இலவச கண்மருத்துவ முகாம் நடைபெற்றது.
- பல்வேறு கிராம பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் சுமார் 70 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர். அந்த முகாமை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு கிராம பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் சுமார் 70 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை முடிந்து நத்தம் திரும்பினர். அவர்களை ஒன்றியக்குழு தலைவர் ஆர். வி. என். கண்ணன் வரவேற்றார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சின்ன கவுண்டர், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அவை தலைவர் சேக்ஒலி, மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லையா மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் குப்பான், அம்சவல்லி, செந்தில், ஆண்டிச்சாமி, மனோகரன் , கவுன்சிலர்கள் சிவா, விஜயவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் உள்நோயாளி களுக்கு தகரத்தால் ஆன தற்காலிக செட் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படு கிறது.
- கட்டிட பணிகளால் நோயாளிகள் பாதிப்படை ந்து வருகின்றனர். பல சமயங்களில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதால் மிகுந்த மனவேதனை அடைந்து வருகின்றனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்ட த்தில் திண்டுக்கல், பழனி ஆகிய 2 சுகாதார மாவட்ட ங்கள் செயல்பட்டு வரு கின்றன. இதில் பழனி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் திண்டுக்கல்லில் இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பழனி அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் ரூ.90 கோடி மதிப்பில் பழனி அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு உள்நோயா ளிகள், வெளிநோயாளிகள் பிரிவிற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர்.
பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் உள்நோயாளி களுக்கு தகரத்தால் ஆன தற்காலிக செட் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படு கிறது. அங்கு இடப்பற்றா க்குறை காரணமாக மேலும் சிலர் மரத்தடியில் படுக்க வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வார்டுகளை இடித்து விட்டதால் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் உள்ள பொதுக்கழி ப்பறையை அனைவரும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் அங்கு குடிநீர் வசதியும் சரிவர செய்து தரப்பட வில்லை.
பகலில் வெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தகரசெட்டு களுக்குள் தங்கியிருக்கும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரு கின்றனர். கட்டுமான பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை நோயாளிகள் தகர செட்டு க்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டிட பணிகளால் நோயாளிகள் பாதிப்படை ந்து வருகின்றனர். பல சமயங்களில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதால் மிகுந்த மனவேதனை அடைந்து வருகின்றனர். பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு பழனி நகர் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு பொதுமக்கள் வருகின்றனர். இதுதவிர அடிக்கடி விபத்துகள் நடைபெறும் பகுதியாகவும் இருப்பதால் சாலை விபத்துகளில் சிக்கி உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கும் வருகின்றனர். உரிய நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்படும்போது உயிரிழப்பு அபாயமும் உள்ளது.
சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் மற்றும் முதிய வர்கள் அலைக்கழிக்கப்படு வதால் சிரமம் அடைந்து வருகின்றனர். பலர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விடும் மனநிலைக்கு வந்தா லும் பலர் வேறு வழியின்றி அரசு ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.
எனவே கட்டுமான ப்பணிகள் நிறைவடையும் வரை நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் உரிய சிகிச்சை கிடைப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விபத்தில் 7 பேர் பலியான வழக்கு திண்டு க்கல் 3-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது.
- இந்த வழக்கில் அரசு டிரைவர் ராஜாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்க ப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மே 5-ந் தேதி மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார். அம்பாத்துரை அருகே அமலிநகர் பகுதியில் வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 7 பயணிகள் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். இது தொடர்பான வழக்கு திண்டு க்கல் 3-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2022 ஜூலை 12-ந் தேதி இந்த வழக்கில் டிரைவர் ராஜாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்க ப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டிரைவர் ராஜா தரப்பில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதின்றத்தில் மேல்முறையீடு செய்ய ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி மெகபூப்அலிகான் ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உடனடி யாக அமல்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
- முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.
- இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது.
பழனி:
மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பொதுவாக அழைப்பிதழ் கொடுக்கும்போது தாம்பூலத்தட்டில் வெற்றிலை-பாக்கு மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை உள்ளிட்ட பழங்களை வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது தான், நீண்ட நெடுங்காலமாக நம்முடைய மரபாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், ஆனால் நேற்று அ.தி.மு.க.வினர் அழைப்பிதழ் கொடுத்தபோது தாம்பூலத்தட்டில் வெற்றிலை பாக்குடன் தக்காளி பழங்களை வைத்திருந்தனர். இது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு அழைப்பிதழுடன், ஒரு கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது. எட்டாக்கனியாக இருந்த தக்காளியுடன் கொடுத்த அழைப்பிதழை பொதுமக்கள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கினர்.
- திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகன விபத்து வழக்கில் ஊனச் சான்று பெறுவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இதில் விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200 நபர்கள் முகாமின் மூலம் பயன் அடைந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகன விபத்து வழக்கில் ஊனச் சான்று பெறுவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கினார்.
விழாவில் தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா, டாக்டர்கள் கவிதா, லலித் குமார், வக்கீல்கள் சங்க தலைவர் செந்தில் குமார், செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வக்கீல் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200 நபர்கள் முகாமின் மூலம் பயன் அடைந்தனர்.
- சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.
- பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வடமதுரை:
அய்யலூர் அருகே கடவூர் பிரிவு சாலையில் ஒரு வாலிபர் சந்தேகத்தி ற்கிடமாக சுற்றித்திரிந்தார். சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.
இதேபோல் 5க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதை கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பொது மக்கள் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி மாவட்டம் எலமனம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என தெரிய வந்தது. மேலும் அவருடன் வந்த 2 வாலி பர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவு திருடு போகிறது. வெளி யூர்களில் இருந்து வரும் நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
- தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,
தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழிதலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை கள், பிளாஸ்டிக்கை தவிரத்து மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பொது அறிவிப்புகள், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தில் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
எனவே ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாத த்தில், தங்களது கருத்து க்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.
- அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது
- திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
திண்டுக்கல்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. சிறுதானிய உணவுகள், ஜெல்லி மிட்டாய், தரை விரிப்புகள், டெரகோட்டா வெண்பொம்மைகள், கீ செயின், சின்னாளபட்டி சுங்குடி மற்றும் பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான பொருட்களை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், மேலாளர் வேல்முருகன், கல்லூரி முதல்வர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இல்லம்தேடி கல்வி தன்னார்வலரான ஆசிரியையை முன்விரோதம் காரணமாக ஒருமையில் பேசி தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்தார்.
- கல்வி அதிகாரிகள் நேரடியாக விமர்சித்த ஆசிரியரை கண்டித்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகில் உள்ள பூத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதே ஊரை சேர்ந்த இல்லம்தேடி கல்வி தன்னார்வலரான ஆர்த்தி என்பவரை பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கோபி நாதன் என்பவர் முன்விரோ தம் காரணமாக ஒருமையில் பேசி தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்தார். இதுகுறித்து ஆர்த்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார்.
இதனைதொடர்ந்து ஆர்த்தியின் உறவினர்களும் கோபிநாதனுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனைதொடர்ந்து கல்வி அதிகாரிகள் நேரடியாக கோபிநாதனை கண்டித்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்தனர்.
- குரும்பபட்டி மற்றும் கணவாய்பட்டி பகுதிகளில் இன்று அதிகாலை நகை, செல்போன், பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஒரே நாளில் 7 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள குரும்பபட்டி மற்றும் கணவாய்பட்டி பகுதிகளில் இன்று அதிகாலை 7 இடங்களில் நகை, செல்போன், பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
குரும்பபட்டியை சேர்ந்த சசிக்குமார் (40) என்பவர் வீட்டில் ரூ.2500 ரொக்கப்பணம், 2 ஜோடி வெள்ளிக்கொலுசு, அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பீரோவை உடைத்து திருடிச் சென்றனர். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் (56) என்பவர் வீட்டில் ரூ.45 ஆயிரம் ரொக்கம், 1 செல்போன் ஆகியவற்றையும், ஆட்டோ டிரைவர் ரமேஷ் (40) என்பவர் வீட்டில் ரூ.1000, சதீஸ்குமார் (31) என்பவர் வீட்டில் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
மேலும் ஆண்டவர் என்பவர் வீட்டில் செல்போன், கணவாய்பட்டி பங்களா பகுதியை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் ரூ.4 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் சிவக்குமார் என்பவர் வீட்டில் 1 செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த திருட்டுச் சம்பவங்கள் அனைத்தும் அதிகாலை சுமார் 4 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்கள் உதவியுடனும், கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 7 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






