search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள் கண்காட்சி
    X

    கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டார்.

    திண்டுக்கல்லில் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள் கண்காட்சி

    • அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது
    • திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    திண்டுக்கல்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. சிறுதானிய உணவுகள், ஜெல்லி மிட்டாய், தரை விரிப்புகள், டெரகோட்டா வெண்பொம்மைகள், கீ செயின், சின்னாளபட்டி சுங்குடி மற்றும் பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான பொருட்களை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், மேலாளர் வேல்முருகன், கல்லூரி முதல்வர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×