என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • போதை ப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலை யினை எட்டும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    சர்வதேச போதை ப்பொருள் ஒழிப்பு தினத்தி னை முன்னிட்டு, "போதை ப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற நிலை யினை எட்டும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று க்கொண்டனர்.

    இதில் கலெக்டர் தெரி வித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்க ளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாணவ-மாணவிகள் போதை போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

    போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவரு டைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படு கிறது. எனவே, நண்பர்கள், உறவினர்கள் அனைவரிட த்திலும் போதை பொரு ள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். எதிர்கால சமூகத்தை சீரமைக்க வேண்டிய கடமை, பொறுப்பு நம் அனை வருடைய கையில் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக த்தில் தொடங்கிய விழிப்பு ணர்வு பேரணி, பேருந்து நிலையம், பூ மார்க்கெட், காமராஜர் சிலை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வமனை வழியாக மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று நிறை வடைந்தது. பேரணியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், "ஒழிப்போம் ஒழிப்போம் போதை பழக்கத்தை ஒழிப்போம், அழிப்போம் அழிப்போம் உள்ளிட்ட போதை ஒழிப்பு ெதாடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன், உதவி ஆணையர்(கலால்) சிவக்குமார், கோட்ட அலு வலர் (கலால்) திண்டுக்கல் நவனீதன், மதுவிலக்கு ப்பிரிவு ஆய்வாளர் ராஜபுஷ்பம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் கொசவபட்டி மேல்நிலைப் பள்ளியிலும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும்.
    • விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற கடைகள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • 1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார்.
    • எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு நுழைவாயிலில் 51 அடி உயர கொடிமரம் நடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைத்து தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு 25 லட்சத்திற்கும் அதிகமாக தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவிலேயே வேறு ஒரு கட்சியும் இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்தியது இல்லை என கூறும் அளவிற்கு வெற்றி மாநாடாக அமையும். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியும் பார்த்து, பார்த்து செய்யப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு எப்படியாவது இடையூறு அல்லது தடை செய்ய தி.மு.க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அது ஒருபோதும் பலிக்காது.

    1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். அ.தி.மு.க.வில் 2 கோடியே 25 லட்சம் தொண்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது.

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த தீர்மானத்தின்போது பங்கேற்று பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி தமிழகத்தில் சமூகநீதி காக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், மணிப்பூரில் திரவுபதிக்கு நேர்ந்ததைபோல துகில் உரியப்பட்டதாக ஆவேசமாக பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.

    அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் துகில் உரியப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி இதுதான் தி.மு.கவின் சமூகநீதியா என கேள்வி எழுப்பினார். தி.மு.கவின் சமூகநீதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சிவகங்கையின் வீரமங்கை வேலுநாச்சியாராக நாங்கள் பார்க்கிறோம். அன்றைய சட்டசபை நிகழ்வின்போது உறுதிமொழி எடுத்து கொண்ட ஜெயலலிதா இனிமேல் இந்த சட்டசபைக்குள் முதலமைச்சராகத்தான் நுழைவேன் எனக்கூறி அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவிஏற்றார். வரலாறு இவ்வாறு உள்ள நிலையில் சமூகநீதிக்காக தி.மு.க போராடுவதாக பேசுவதும், மணிப்பூர் பெண்களை திரவுபதியாக சித்தரித்து கனிமொழி பேசியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

    எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே. இதனை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுமுறை நாட்களில் வகுப்பில் எடுத்த பாடங்களை ஏன் ஏழுதி வரவில்லை என கேட்டு மாணவனை தலைமை ஆசிரியை அடித்துள்ளார்.
    • அதிகாரிகள் தலைமை ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மாயவன் (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு கவுதம் (வயது13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கவுதம் பிலாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை. மீண்டும் பள்ளிக்கு வந்தபோது அவரை தலைமை ஆசிரியர் சாந்தி கண்டித்துள்ளதாக தெரிகிறது. விடுமுறை நாட்களில் வகுப்பில் எடுத்த பாடங்களை ஏன் ஏழுதி வரவில்லை என கேட்டு அவரை அடித்துள்ளார். இதனால் கவுதம் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இது குறித்து மாயவன் கேட்டபோது நடந்த விவரங்களை கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாயவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். அந்த புகாரில் தலைமை ஆசிரியர் சாந்தி தொடர்ந்து இதேபோல் பள்ளி மாணவர்களை தாக்கி மிரட்டி வருகிறார். நாங்களும் இது குறித்து புகார் சொல்லாமல் இருந்து வந்தோம். ஆனால் தற்போது வரம்பு மீறி செயல்படுவதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையே நிறுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனைப்போலவே பல குழந்தைகள் இதுபோல் பாதிப்படைந்து வருகின்றனர். அதிகாரிகள் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    இது குறித்து வட்டார கல்வி அதிகாரியிடம் கேட்டபோது மாணவன் தாக்கப்பட்டது குறித்து புகார் தற்போது போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சுமார் 1 மணி நேரம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    • சூறாவளி காற்றுக்கு வேரோடு முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சுமார் 1 மணி நேரம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு இருந்த மரம் சூறாவளி காற்றுக்கு வேரோடு முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

    ஆனால் அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது விழுந்ததால் வாகனங்கள் சேதம் ஆனது. வழக்கமாக அந்த இடத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருவார்கள். மழை பெய்ததால் பொதுமக்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    • உணவுக்காக 2 குழந்தைகளும் அழுது கொண்டே இருந்தது. ஆனால் தந்தை குழந்தை க்கு உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
    • குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த தந்தையை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி குல்லலக்கு ண்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது30). இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தேவி (23). இவர்க ளுக்கு காமாட்சி (3) மற்றும் 6 மாத பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர்.

    நாகராஜீக்கு சரிவர வேலை இல்லாததால் போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டு வந்தனர். இதனால் குழந்தைகளுக்கு சரிவர உணவு கொடுக்க முடியவில்ைல. கைக்குழ ந்தைக்கு பால்கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தாய் மற்றும் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் உணவுக்காக 2 குழந்தைகளும் அழுது கொண்டே இருந்தது. ஆனால் நாகராஜ் குழந்தை க்கு உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் அவ்வப்போது குழந்தை களுக்கு உணவு கொடுத்து வந்தாலும் நாகராஜ் தனது இயலாமையை போக்க குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்காததால் 3 கிலோ எடையில் இருந்து குறைந்து எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு மெலிந்து போனது. இதனால் அப்பகுதி மக்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    சமூக நலத்துறை அதிகாரி புஷ்பகலா, குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், தாசில்தார் தனுஷ்கோடி, அமையநாயக்கனூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் நோய்வாய்பட்டு உடல் மெலிந்து காணப்பட்ட குழந்தைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால் குழந்தை களை எடுத்துச் செல்ல விடாமல் தகராறு செய்த தேவி தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அதிகாரிகள் அவர் மீது தண்ணீர் ஊற்றி ஆறுதல் தெரிவித்தனர்.

    பின்னர் குழந்தை களுக்காகவும், உனது ஆரேக்கியத்துக்காகவும் காப்பகத்தில் சேர்த்து உதவ இருப்பதாக தெரிவித்தனர்.

    அதன்பிறகு தேவி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் வேனில் ஏற்றிச் சென்றனர். குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த நாகராஜை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • செம்பட்டியில் ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.

    செம்பட்டி:

    செம்பட்டியில் ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசிய தாவது:-

    மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிரு க்கிறது. தி.மு.க. தொண்டன், மிசா பொடா சட்டத்தைப் பார்த்து அஞ்சியது கிடை யாது. வரும் பாராளுமன்றத் தேர்தலை துணிவோடு எதிர் நின்று சந்திக்க வேண்டும். நான் தொண்ட னுக்காக வாழ்கிறேன். எனக்கு உறவினர்கள், எல்லாம் இந்த இயக்கமும் தொண்டனும்தான். நான், இந்த இயக்கத்தின் தொண்டனை பற்றி சிந்திக்காத நாள் கிடையாது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள், இளைஞர்கள் துடிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். தி.மு.க. கோட்டையாக திண்டுக்கல் திகழ வேண்டும் என பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது.
    • ரஜினி ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இந்திராகாந்தி, ஜெயலலிதா ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருந்தன.

    திண்டுக்கல்:

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. ரஜினிகாந்தின் 169-வது படமான ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்கவில்லை. இருந்தபோதும் தியேட்டர்கள் முன்பு அவரது ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து பிரமாண்ட பேனர்கள் வைத்திருந்தனர். திண்டுக்கல்லில் 7 தியேட்டர்களில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டது.

    படம் வெற்றிபெற வேண்டி ரஜினி ரசிகர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக தியேட்டருக்கு வந்தனர். மேலும் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் இசைத்தும் ஆடிப்பாடி தியேட்டருக்கு வருகை தந்தனர். ரஜினிகாந்தின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், தீபாராதனை காட்டியும் மகிழ்ந்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியில் உள்ள தியேட்டர் முன்பு ஜெயிலர் படம் வெற்றிபெற வேண்டி காங்கிரஸ் சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்திருந்தனர். இதேபோல பா.ஜ.க. சார்பிலும் அக்கட்சி நிர்வாகிகள் பேனர்கள் வைத்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்தது போன்ற புகைப்படம், அண்ணாமலை படம் ஆகியவற்றுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இதேபோல ரஜினி ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இந்திராகாந்தி, ஜெயலலிதா ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனால் அனைத்து கட்சி சார்பிலும் ஜெயிலர் படத்திற்கு வரவேற்பு தெரிவித்து போஸ்டர் மற்றும் பேனர்கள் இடம் பெற்றிருந்தன. 

    • ரூ.22 லட்சத்தில் கோபாலச முத்திரம் கிழக்குக்கரை பகுதியில் இயற்கை முறை யில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை மேயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரை சுத்தப்படுத்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாநகராட்சி 12-வது வார்டில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்தில் கோபாலச முத்திரம் கிழக்குக்கரை பகுதியில் இயற்கை முறை யில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கல்லறை தோட்டம், கோபால் நகர், ரோமன்மிஸன் தெரு, ஒய்.எம்.ஆர். பட்டி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், வாய்க்கால் வழியாக கோபாலசமுத்திரம் மழைநீர் சேகரிப்பு மையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த கழிவுநீர் 6 தடுப்பணைகள் அமைத்து சுத்திகரிப்பட உள்ளது. இதற்கு கல் வாழை, யானைக்கால், மஞ்சு, வெட்டி வேர் மற்றும் வடிகட்டி அமைப்பு கட்டப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து கோபாலசமுத்திரம் மழைநீர் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கும் வகையில் அமைகிறது.

    இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை மேயர் இளமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமையவுள்ள சுத்தி கரிப்பு முறை மற்றும் செயல்படும் முறைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். மேலும் விரைவில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி பொறியாளர் சுப்பிர மணி, உதவி பொறியாளர் சாமிநாதன், கவுன்சிலர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மீன்பிடி திருவிழாவில் குளத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர்.
    • சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள காணப்பாடி கிராமத்தில் மந்தைகுளம் உள்ளது. இங்கு மீன்குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் மீன்கள் அதிகளவில் காணப்பட்டன. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

    இதனைதொடர்ந்து ஊர்நாட்டாமை ராம லிங்கசேதுபதி தலைமையில் இன்று கிராமமக்கள் மந்தைகுளத்தில் ஒன்றுகூடினர். நாட்டாமை கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். காணப்பாடி ஊராட்சி தலைவர் பாண்டி, முருகேசன் மற்றும் ஊர்முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    குளத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர். சிறுவ ர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர். கெண்டை, கெழுத்தி, ரோகு உள்ளிட்ட பல்வேறு மீன்கள் அதிகளவில் கிடைத்தன. அதனை பிடித்து சென்ற பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைத்து சாப்பிட்டனர்.

    சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படாது என்றும், அதனை தங்கள் சொந்த தேவைக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

    • திண்டுக்கல் ரெயில்நிலை யத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இன்றுமுதல் தொடர் தீவிர சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யப்ப ட்டு வருகிறது. அதேவேளை யில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் ரெயில்நிலை யத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இன்றுமுதல் தொடர் தீவிர சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    தண்டவாள பகுதி முழுவதும் தொடர்ந்து மெட்டல்டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்ட னர். ரெயில்நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமை களும் முழுமையாக பரிசோதனை செய்ய ப்பட்டது. ரெயில்நிலை யங்களுக்கு வரும் பார்ச ல்கள் அனைத்தும் கடுமையான பரிசோதனை களுக்கு பின்பே உரியவர்களி டம் வழங்கப்பட்டது. மேலும் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி உள்ள ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரெயில்நிலைய வளாகம் முழுவதும் தீவிர கண்கா ணிப்பில் கொண்டுவர ப்பட்டுள்ளது. சந்தேக ப்படும்படியான நபர்கள் யாரேனும் சுற்றிவரு கிறார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்நிலைய ங்களிலும் இதுபோன்ற சோதனை மேற்கொள்ள ப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதேபோல் பஸ்நிலையம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதிகள், லாட்ஜ்களில் வெளியூர் நபர்கள் யாரேனும் சந்தேக ப்படும்படியாக தங்கி உள்ள னரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். வழி பாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×