நிலக்கோட்டையில் கன மழைக்கு முறிந்து விழுந்த மரம்

சுமார் 1 மணி நேரம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு வேரோடு முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூறாவளிக்காற்றுக்கு வேரோடு முறிந்து விழுந்த மரம்.
சூறாவளிக்காற்றுக்கு வேரோடு முறிந்து விழுந்த மரம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சுமார் 1 மணி நேரம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு இருந்த மரம் சூறாவளி காற்றுக்கு வேரோடு முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

ஆனால் அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது விழுந்ததால் வாகனங்கள் சேதம் ஆனது. வழக்கமாக அந்த இடத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருவார்கள். மழை பெய்ததால் பொதுமக்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com