என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைச்சாலையில் சாய்ந்த நிலையில் உள்ள குவிலென்ஸ் கண்ணாடி.
வத்தலக்குண்டு - கொடைக்கானல் சாலையில் குவிலென்ஸ் கண்ணாடி சாய்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
- அதிகமான வளைவுகள் கொண்ட இந்த மலைச்சாலை யில் விபத்தை தவிர்க்க குவிலென்ஸ் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக வாழகிரி - ஊத்துப்பகுதியில் குவிலென்ஸ் கண்ணாடி சேதமடைந்துள்ளதால் பஸ், லாரி, கார், பைக்குகளில் செல்பவர்கள் அவதி யடைந்து வருகின்றனர்.
பெரும்பாறை:
வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைப்பாதையில் ஏராள மான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. அதிகமான வளைவுகள் கொண்ட இந்த மலைச்சாலை யில் விபத்தை தவிர்க்க குவிலென்ஸ் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிரே வரும் வாகனங்களை எளிதாக வாகன ஓட்டிகள் கண்டுகொள்ள முடியும்.
இந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட குவிலென்ஸ் கண்ணாடி பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக வாழகிரி - ஊத்துப்பகுதியில் குவிலென்ஸ் கண்ணாடி சேதமடைந்துள்ளதால் பஸ், லாரி, கார், பைக்குகளில் செல்பவர்கள் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் விபத்து அபாயமும் உள்ளது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






